People's Watch in Media
Failed by the Judiciary Tamil Nadu’s courts keep issuing orders against illegal mining. The quarries stay open. The activists get killed. And justice? Mostly adjourned. EDGAR KAISER, HENRI TIPHAGNE The killing of Jagabar Ali...
Tamil Nadu: JAACT seeks special Act against police excesses Chief Minister MK Stalin, who praised the film Jai Bhim (which talks about the gruesome truth of custodial torture), should take responsibility for the custodial deaths taking place under...
திமுக ஆட்சியில் என்கவுண்டர், மனித உரிமை மீறல்.. தமிழகம் முதலிடம்'' - 75 இயக்கங்கள் கண்டன அறிக்கை! -மனித உரிமை மீறலில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்வதாக குற்றச்சாட்டு "திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்" பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ............................................ `அதிகாரத் திமிருடன் மனித உரிமை மீறல்..' இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காக்கிறது. தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இதுபோன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும். சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அறிக்கை சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே சளைக்காமல் திமுக ஆட்சியில் போலீஸ் செய்த 16ஆவது என்கவுண்டர் அதிகரிக்கும் காவல் வன்முறைக்கு காரணமான போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் குற்றத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை உடைப்பதும், கைது செய்யப்பட்டவரை மீண்டும் சுட்டுப் பிடிப்பதும், தமிழ்நாட்டின் காவல்துறையின் வன்முறை என்பது அன்றாட பணியாக மாறிவிட்டது. தற்போது சட்டமன்றத் தொடர் நடக்கும் போதே திமுக ஆட்சியில் 16ஆவது என்கவுண்டர் நடத்தி, இதுவரை 19 நபர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகரக் காவல் ஆணையராசு அருண் பொறுப்பேற்ற பின்பு, சென்னை மாநகரக் காவல்துறையினர், 4 நபர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதுபோன்று தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் போலீசாரை மக்கள் கண்காணிப்பகம் கண்டிக்கிறது. ....................................
திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் போலி மோதல் கொலைகள் 75 இயக்கங்களின் கூட்டறிக்கை பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025 வெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை குழந்தைகள் சுட்டுப் பிடித்து விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல் தமிழ்நாட்டில் தினந்தோறும் போலீஸ் எவரேனும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் என அடுத்தடுத்து இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களின் குருதி காய்வதற்குள் ஏப்ரல் 1ஆம் தேதி கடலூரில் 19 வயது நிரம்பிய முட்டை விஜய் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற நாடகத்தை முன்னிறுத்தி, தற்காப்பு என்ற பெயரில் "பொய்யான மோதல் சாவுகளை" நடத்திவரும் தமிழ்நாடு காவல் துறையை, 75 இயக்கங்கள் கூட்டாக இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது. .....................................................................
Opinion: TN’s ‘encounters’ are unbecoming of a government with social justice principles When the State praises ‘encounter specialists’ like S Velladurai IPS for their extra-constitutional acts, and spares ‘torture specialists’ like Balvir Singh IPS, police...
NHRC urged to lift Andhra HC stay on Chittoor encounter case It also directed the AP government to pay Rs 5 lakh interim relief to kin of each victims and suggested a CBI probe into the incident ...
பெருகும் குற்றங்கள்... சறுக்கும் காவல்துறை... என்ன செய்யப் போகிறார் முதல்வர்? "காவல்துறை யாருக்குமே பதில் சொல்ல அவசியமில்லாத சூழல் இங்கே உருவாகிவிட்டது. முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது காவல்துறை. இந்த நான்காண்டுகளில் எத்தனையோ நிறுவனங்களில் அவர் ஆய்வு செய்திருக்கிறார். காவல் துறையில் ஆய்வு செய்திருக்கிறாரா..?" என்று கேள்வியெழுப்புகிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டி.பேன். "காவல்துறையில் பணிபுரிபவர்களைக் கேள்வி கேட்கக்கூடிய நிலையில் உயர் அதிகாரிகளும் இல்லை. முதலமைச்சரும் இல்லை. நீதித்துறையும் அமைதியாக இருக்கிறது. பத்திரிகைகளில் வருகிற செய்திகளை நீதிபதிகள் பார்க்கிறார்களா? மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தானாகவே முன்வந்து நீதிமன்றம் தலையிட வேண்டும். ஸ்டெர்லைட் சம்பவத்தில் போலீஸ் அத்துமீறல் நடந்தபோது, மாஜிஸ்ட்ரேட் களத்தில் இறங்கினார். ஒவ்வொரு காவல் நிலையமாகப் போய் ஆய்வுசெய்து சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்கச் செய்தார். 2020-ல் ஒரு காவல் நிலைய மரணம். இறந்த பையனின் அப்பாவிடம் பேசி வழக்கை முடித்துவிட்டார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றபிறகு வழக்கு தூசி தட்டப்பட்டு இப்போது ஏழு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி, நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முதலமைச்சரும் உயரதிகாரிகளும் மௌனம் சாதிக்கும்போது நம்முன் இருக்கும் நம்பிக்கை நீதிமன்றங்கள் தான்" என்கிறார் ஹென்றி டிபேன்.
