Press Releases
People's Watch wishes to warmly congratulate the Honourable Chief Minister, Thiru. C. Joseph Vijay, on successfully carrying out his duties as the new Chief Minister by respecting democratic norms, adhering to social justice principles and the rule of...
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வெற்றிகரமாக பணியை கொண்டுசெல்ல மக்கள் கண்காணிப்பகம் வாழ்த்துகிறது. 2018 மே 22, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் தொடர் நிகழ்வுகளிலும் 16 பேர் பலியான நினைவு தினத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாமல் போன கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற...
Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனையும் நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து வந்தோம். அவரும் அந்த கோவிலில்தான் பணியாற்றுகிறார். அஜித் குமாரின் தூரத்து சொந்தக்காரர் அவர். அந்த வீடியோவை எடுக்கும்போதே பதைபதைப்புடனும் அச்சதோடும்தான் எடுத்திருக்கிறார்." - ஹென்றி திபேன். .................................................................
மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாக்குதலில் காயப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லையில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்கப்பட வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்யும் நோக்கோடு பெண் வீட்டார் செயல்பட்டுள்ளனர். என்பதனை அறிய முடிகிறது எனவே காதல் திருமணம் செய்த இருவருக்கும் நிரந்தரமான பாதுகாப்பை வழங்கியும், இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பணியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 21.11.2023 அன்று மாநிலம் முழுவதும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் செய்தியில், 07.11.2023 அன்று பெண் காவலர் ஒருவர், போக்ஸோ (POCSO Act) வழக்கில் பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காக, ஊட்டியில் உள்ள அன்னை சத்யா இல்லத்தில் இருந்து கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பெண் காவலர் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, கிட்டத்தட்ட 400 மீட்டர் நடந்தவாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். நீதிமன்ற வாசலில் மட்டும் கை விலங்கை அகற்றி, 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றவுடன், மீண்டும் அச்சிறுமிக்கு கை விலங்கிட்டு, பொது சாலையில் பேருந்து நிலையம் வரை நடக்க வைத்தது என்பது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கிறது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து (Suo-Moto) இவ்வழக்கினை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியதோடு, மனித உரிமைகள் திருத்தச் சட்டம், 2019 பிரிவு 12 (A) இன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தாமாக முன் வந்து (Suo-Moto) விசாரணைக்கு எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் 25.11.2023 அன்று மனு அனுப்பிள்ளது.
People’s Watch sent representation to seeking suo-moto action to Chief Justice of Madras High Court and urged Tamil Nadu State Human Rights Commission to take suo-moto cognizance under section 12 (a) of the Protection of Human Rights (Amendment) Act,...
You have issued a statement dated 04.04.2023 titled Media trial regarding an allegation of Custodial Violence against Mr. Balveer Singh, IPS, due to public interest. You addressed the statement to “Dear All” without specifying any name. So, we have...
