திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் போலி மோதல் கொலைகள்
75 இயக்கங்களின் கூட்டறிக்கை
பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025 வெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2025
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை
குழந்தைகள் சுட்டுப் பிடித்து விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல் தமிழ்நாட்டில் தினந்தோறும் போலீஸ் எவரேனும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் என அடுத்தடுத்து இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களின் குருதி காய்வதற்குள் ஏப்ரல் 1ஆம் தேதி கடலூரில் 19 வயது நிரம்பிய முட்டை விஜய் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற நாடகத்தை முன்னிறுத்தி, தற்காப்பு என்ற பெயரில் "பொய்யான மோதல் சாவுகளை" நடத்திவரும் தமிழ்நாடு காவல் துறையை, 75 இயக்கங்கள் கூட்டாக இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது.
.....................................................................
