மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அறிக்கை
சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே சளைக்காமல் திமுக ஆட்சியில் போலீஸ் செய்த 16ஆவது என்கவுண்டர்
அதிகரிக்கும் காவல் வன்முறைக்கு காரணமான போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் குற்றத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை உடைப்பதும், கைது செய்யப்பட்டவரை மீண்டும் சுட்டுப் பிடிப்பதும், தமிழ்நாட்டின் காவல்துறையின் வன்முறை என்பது அன்றாட பணியாக மாறிவிட்டது. தற்போது சட்டமன்றத் தொடர் நடக்கும் போதே திமுக ஆட்சியில் 16ஆவது என்கவுண்டர் நடத்தி, இதுவரை 19 நபர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகரக் காவல் ஆணையராசு அருண் பொறுப்பேற்ற பின்பு, சென்னை மாநகரக் காவல்துறையினர், 4 நபர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதுபோன்று தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் போலீசாரை மக்கள் கண்காணிப்பகம் கண்டிக்கிறது.
....................................
