People's Watch in Media
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: தகுதி அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பான வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ-யின் விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். .....................
The gaping flaws in India’s long march to disability justice On the ground, the interactions of people with disabilities with courts, policing and prison infrastructures and the fundamental lack of will to effectively implement the RPWD Act,...
மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்? "மலையில் சாதி, மதம் பார்க்காமல் வாழ்ந்த எங்களுக்கு சமத்துவபுரம்போல் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், மலையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக் கூடாது" என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்". மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஹென்றி திபேன், ராபர்ட் சந்திரகுமார் பேசும்போது, "மாஞ்சோலையில் இன்னும் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இன்றளவும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மற்றவர்கள் கீழே உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க மாஞ்சோலைக்கு சென்று வருகிறார்கள். மறுவாழ்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இதைக் கடந்து புலிகள் காப்பக பகுதியில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
Manjolai families seek samthuvapuram, nothousing complex Madurai: Families in Manjolai are ready to relocate but have urgedthe state govt to consider establishing a samathuvapuram(Periyar memorial equality village) instead of moving them to amulti-storeyed housing complex in Reddiarpatti, Tirunelveli....
Manjolai workers appeal to TN government against forceful eviction; seek time till disposal of SLP The workers said they are ready to obey the High Court's order and have no intention to remain at the estate. But the...
