for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

12 Jan 2017 தொடரும் தமிழக காவல்துறையின் கொலைகள் Press Releases Madurai, Tamil Nadu

சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை, வைரவன்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன், கார்த்திகைச்சாமி (26/17) பெரியக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியில்அவருக்கும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் கார்த்திகைச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக 2017 ஜனவரி 11 தொலைக்காட்சிகள் வழியாக செய்தி அறியப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மையறியும் குழுவினர் அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

#HenriTiphagne, #PeoplesWatch, #Fake, #Encounter, #Karthigaisamy, #Sivagangai, #PoliceEncounter, #FakeEncounter, #PoliceTorture, #Nayinakulam
1 Jan 2017 காவலர்கள் தாக்கியதில் பட்டியலினச் சிறுவனின் காது கேட்கும் திறன் பாதிப்பு Press Releases Madurai, Tamil Nadu

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆத்திப்பட்டியையச் சேர்ந்த மாrச்சாமி(43) என்பவரின் மகன் சக்தி (18). பட்டியலின குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். காவலர்கள் தாக்கியதில் பட்டியலினச் சிறுவனின் காது கேட்கும் திறன் பாதிப்பு. குற்றமிழைத்தக் காவலர்கள் மீது வன்கொடுமைத் தட்டுப்புச்சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை....

#HenriTiphagne, #PeoplesWatch, #PoliceTorture, #Tiruchuzhi, #Virudhunagar, #KuravarCommunity
14 Oct 2016 சென்னையில் தொடரும் காவல் மரணங்கள் Press Releases Madurai, Tamil Nadu

புதுப்பேட்டையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேச நிகழ்விற்காக பங்கேற்க சென்ற முகேஷ் மற்றும் கண்ணகிநகரை சார்ந்த வசந்த் (20) விக்கி(எ)மோகன்(22) ஆகியோர்களை எக்மோர் காவல்நிலைய காவலர்கள் மூன்று நபர்களையும் கண்ணகிநகரை சார்ந்த நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என கூறி லத்தியால் அடித்துள்ளனர். அடிதாங்காமல் பயந்து மூன்று பேரும் கூவம் கரை வழியாக ஓடி உள்ளனர். பின்னாடியே துரத்திக் கொண்டே ஓடிவந்த காவலர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்துள்ளனர். இதனால் முகேஷுக்கு பின் தலையில் மண்டை பிளந்து ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கி(எ)மோகன் என்பவருக்கு பின்பக்கம் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வசந்த் என்பவர் போலீசாரால் கைது

#HenriTiphagne, #PeoplesWatch, #PoliceTorture, #KannagiNagar, #Muhesh, #CustodialDeath, #KannagiNagarChennai
12 Oct 2016 Srikanth Balaji, from Chennai is battling for his life at the Royapettah Hospital resulting from police and prison torture Press Releases Madurai, Tamil Nadu

People’s Watch strongly condemns the torture of Srikanth Balaji by Manali police and Puzhal prison officials and calls for urgent quality treatment to save his life in the Government Multi Speciality hospital in Chennai

#HenriTiphagne, #PeoplesWatch, #SrikanthBalaji, #ManaliPolice, #PoliceTorture, #PuzhalCentralPrison, #RoyapettahGovernmentHospital, #Condemns, #Balaji, #Srikanth, #VijayakumarIPS, #ADGPVijayakumar
12 Oct 2016 கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் தடுக்க முயன்றவர்கள் கைது Press Releases Madurai, Tamil Nadu

கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்று அரசியல் சட்டம் 51A (G) பிரிவின் கீழ் தங்களின் அடிப்படைக் கடமையாற்றிய அரசியல் தலைவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டளர்களையும், விவசாய சங்கத்தினரையும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.

#HenriTiphagne, #PeoplesWatch, #Nallakannu, #CPI, #IllegalArrestsOfPoliticalPartyLeaders, #AyyaNallakannu, #Velayuthampalayam, #KarurKadampankurichi, #PoliticalParty, #IllegalArrest
11 Oct 2016 சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜி மீது காவல் துறையும் சிறைத்துறையும் கூட்டாக நடத்திய சித்திரவதை Press Releases Maduai, Tamil Nadu

சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜியை 03.10.2016 அன்று காலை 7.00 மணியளவில் மணலி விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவல்த்துறையும் சிறைதுறையும் கூட்டாக நடத்திய சித்திரவதையால் ஸ்ரீகாந்த் பாலாஜி ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதி

#HenriTiphagne, #PeoplesWatch, #SrikanthBalaji, #PoliceTorture, #Police, #ManaliPoliceStation, #RoyapettahHospital
13 Sep 2016 The myopia of hate politics versus the rule of law Press Releases Madurai, Tamil Nadu

People’s Watch, committed to preservation, promotion and defence of human rights, unequivocally condemns the attack on Kannadiga establishments in different parts of Tamil Nadu as well as the attack on Tamils in Karnataka and especially the burning of over 40 KPN...

#HenriTiphagne, #PeoplesWatch, #Myopia, #KPN, #HumanRights, #40KPNBusesInBengaluru, #RuleOfLaw, #TamilsInKarnataka, #Cauvery, #River, #StateHumanRightsInstitutions
12 Jul 2016 சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் Press Releases Madurai, Tamil Nadu

சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவமும் அவர்களை காவல்த்துறை பிடித்த விதமும் நான்கு சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவதிற்கு காரணமான சமூகப் பாதுகாப்பு துறையை (Directorate of Social Defence) மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது  

#HenriTiphagne, #PeoplesWatch, #DirectorateOfSocialDefence, #Kelleesh, #33BoysEscapedFromChennaiJuvenile, #Juvenile
6 Apr 2016 ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு கடந்த பின்பும் தலையீடு செய்யாத தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது Press Releases Madurai, Tamil Nadu

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

#HenriTiphagne, #PeoplesWatch, #Semmaram, #20Tamilians, #AndhraPradesh, #APEncounter, #STF, #SpecialTaskForce, #FakeEncounter, #SeshachalamHills, #Seshachalam


Join us for our cause