Press Releases
22.12.2021 PRESS RELEASE People’s Watch welcomes the order of the SHRC and appeals for zero tolerance to violence by uniformed services People’s Watch has the greatest pleasure to welcome and acknowledge the Tamil...
திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது! கடந்த 21.11.2021 அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்
பத்திரிக்கைச் செய்தி ஸ்ரீபெரும்புதூரில் முதல் காவல் கொலை! தூத்துக்குடியில் இரண்டாவது காவல் கொலை! தமிழக காவல்துறைக்கு சுடுவதற்கு கற்றுக் கொடுக்கவேண்டுமா? தூத்துக்குடியில் சரியாக மக்களை சுட்டவர்களுக்கு, காவல்துறை எப்படி சுடவேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டுமா? இடுப்பிற்குக்...
பத்திரிக்கைச் செய்தி ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை: திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். இது தான் சனநாயக மரபின் நடைமுறையில் இருக்கும் அரசியல் ஒழுக்க முறைமை, நியதி ஆகும். ஆனால் தமிழகத்தில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் இந்த அரசைப் பற்றி எதிர்க்கட்சியும், பாரதிய சனதாவும் தொலைக்காட்சிகளில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைப்பது, அநாகரிகமாகப் பேசுவது அரசியல் அறமற்ற செயலாகும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் நூறு நாட்கள், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறவேண்டிய நேரம். சனநாயக நெறிமுறைப்படி புதிய அரசு அமைத்துள்ள “அனைத்துக்கட்சிக் குழுவில்” ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக், கருத்துகளை எடுத்துரைப்பது தான் அராசியல் நாகரிகம் ஆகும். இதைவிடுத்து பொதுவெளியில் குற்றம் சாட்டுவது வெறுப்பரசியலாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகிறது. குடிமைச்சமூகத்தின் நேர்கொண்ட பார்வை: ஓர் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நேர்மையான செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும், தார்மீக உரிமையும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு உள்ளது. குடிமைச்சமூக அமைப்பு என்பதை அரசு சாரா அமைப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம். அவர்கள் மனித உரிமைகளுக்காக, மீறல்களுக்கெதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள், குறிப்பாக அரசியல் கட்சிகளைச் சாராதோர் ஆவர். திமுகவின் வெற்றிக்கு அதன் கட்சியினர் மட்டும் காரணமல்ல. குடிமைச்சமூகத்தினர், எட்டுவழிசசாலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், குடியுரிமைத் திருத்தச்சட்டம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடியோர், தொழிற்சங்கத்தினர், பெண்ணுரிமை அமைப்பினர் மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவோர், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றுவோர், தமிழ்த் தேசிய கருத்துகளை முன் வைத்து பணியாற்றுவோர், ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்தோர் இவர்கள் அனைவரும் மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். இவர்கள் அளித்த வாக்குகளும் சேர்ந்து வெற்றிக்கு வித்திட்டு புதிய அரசைப் பொறுப்பேற்க வைத்துள்ளது என்பதை இங்கே நினைகூர விரும்புகிறோம்.
An open letter to the new government in Tamil Nadu even as it completes 30 days of its newly-won tenure and appeal to the impatient Opposition AIADMK and BJP. Democratic tradition and norms demand that...
முன்னாள் முதலவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழு தமிழர்கள், அனைத்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி NCHRO சார்பாக அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள்,திரைப்பட இயக்குனர்கள் ,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் வெளியிடப்படும் கூட்டறிக்கை கோரிக்கை மனு: People's Watch also Endorsed
People's Watch is attested : Five immediate, effective, and concrete measures to put an end to the Israeli oppression of the Palestinian people
A call for discontinuation of Justice Aruna Commission of Inquiry and other actions against the CBI, NHRC and Criminal Prosecutions against Vedanta
5 நிமிட பேட்டியில் சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு 'சி.சி.டி.வி பதிவுகள் எங்கேயும் பேசப்படவில்லை ஏன்?' - மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன் அவர்களுடன் நேர்காணல்... Courtesy: Sun News - https://www.youtube.com/watch?v=LCuTSZlMT5E