Media
மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை - பா.ஜ.க அரசு தொடுத்துள்ள சனாதன தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்
மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடா்பாக மதுரையைத் தலைமையிடமாகக் கொ ண்டு இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மீது சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை சொக்கிகுளத்தில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1985இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில் அறக்கட்டளையில் கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிதி பரிவா்த்வா்த்தனைகளை மத்திய புலனாய்வுத்துத்துறை ஆய்வு செய்தது. இதைத்தொடா்ந்து அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் கடந்த 2005- 2006, 2010- 2011 மற்றும் 2012- 2013 காலகட்டட் த்தில் வெளிநாடுகளில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் நன்கொடை பெற்றுள்ளதாக, சென்னை மத்திய புலனாய்வுத்துத்துறையின் கீழ் இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டட் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாடா் க மதுரையிலுள்ள தொண்டு நிறுவனத்தில் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினா்.
அதிர வைக்கும் பின்னணி - முதல்வருக்கு உணர்த்தவே பச்சையாக உண்மையை சொல்கிறேன் - மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை குறித்து நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் Dots Media YouTube சேனலுக்கு அளித்த பேட்டி
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு பல கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது அந்தக் கூட்டணி கட்சிகளில் ஒன்றுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. விடுதலை சிறுத்தைகள் சட்டமன்றத் தொகுதியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. என்னதான் தமிழகத்தில் ஆளும் கட்சியோடு கூட்டணியாக இருந்தாலும் ஆளும் கட்சிக்கு அவ்வப்போது கண்டனமும் வலியுறுத்தும் அளிக்கும் கட்சி என்றால் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றே கூறலாம். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை நடத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் அமைப்பு மக்கள் கண்காணிப்பகம் என்று தொல் திருமாவளவன் கூறினார். சட்டத்தின் வழியில் போராடி எளியோரின் உரிமைகளை பாதுகாத்து வரும் மக்கள் காப்பகத்தை கண்காணிப்பு ஒன்றிய அரசு இவ்வாறு அச்சுறுத்துவது என்றும் கூறியுள்ளார். சிபிஐ விசாரணையை நடத்துவதன் மூலம் மனித உரிமை போராளிகளை ஒதுக்கிவிட இயலாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்
PUCL strongly condemns the registration of FIR by the CBI against Centre for Promotion of Social Concerns (CPSC) and its initiative, People’s Watch on 6th January 2022 for alleged FCRA violations of the year 2012, and raids conducted by CBI...