for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

17 Mar 2022 தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுன்ட்டர்கள் - ஹென்றி திபேன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டி People's Watch in Media Madurai

தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுன்ட்டர்கள் - ஹென்றி திபேன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டி  

#Encounter, #PuthiyaThalaimuraiTV, #KalakkaduEncounter, #HenriTiphagne, #NeeraviMuruganEncounter, #EncounterDeath
16 Mar 2022 நீராவி முருகன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது! People's Watch in Media Madurai

நீராவி முருகன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது! மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு களக்காடு வனப்பகுதியில் ரவுடி நீராவி முருகனை காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் மற்றும் அவரது கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம், களக்காடு வனப்பகுதியில் நீராவி முருகன் காவல்துறையினரால் இன்று என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் கீழ் இப்படுகொலை நடைபெற்றதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். ஆனால், என்கவுன்ட்டர் நடத்திதான் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் பேசவில்லை. ஆனாலும், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், "நீராவி முருகன் மீது 60 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பிறகெதற்கு அவரைப் பிடிக்க எஸ்ஐ இசக்கிராஜனை அனுப்பினார்கள்? இந்த எஸ்ஐ மீது தூத்துக்குடியில் பல்வேறு அத்துமீறல் புகார்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு படையினர் சென்றிருந்தால், ஒரே தோட்டா மூலம் நீராவி முருகனின் காலுக்குக் கீழ் சுட்டிருக்க முடியும். அவரை உயிரோடு பிடித்திருக்க முடியும். ஆனால், நீராவி முருகனை கொல்ல வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் இது. எனவே, நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த காக்கிச்சட்டை போட்ட குற்றவாளிகள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

#TheHindu, #HinduTamil, #Encounter, #TirunelveliEncounter, #EncounterDeath, #HenriTiphagne, #Kamadhenu, #NeeraviMuruganEncounter, #Kalakkadu
10 Mar 2022 For ‘Rapid Decline’ in Civic Freedoms, India Added to CIVICUS Monitor’s 'Watchlist' People's Watch in Media New Delhi

For ‘Rapid Decline’ in Civic Freedoms, India Added to CIVICUS Monitor’s 'Watchlist' In its report, CIVICUS highlighted several developments that it saw as cause for concern.  New Delhi: India has been added to a watchlist of countries that...

#TheWire, #HenriTiphagne, #CIVICUS, #CivicSpace, #CivicusMonitor, #PeoplesWatch, #CBI
5 Mar 2022 கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து ஹென்றி டிபேன் அவர்களின் கருத்து - Thanthi TV People's Watch in Media Chennai

Thanthi TV - 05.03.2022 - 'ஆணவ கொலைகளை நீதிமன்ற தீர்ப்புகள் மட்டும் கட்டுப்படுத்தாது' - கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து ஹென்றி டிபேன் (சமூக செயற்பாட்டாளர்) அவர்களின் கருத்து

#HonourKilling, #Gokulraj, #Judgement, #CourtOrder
3 Mar 2022 Thanjavur Suicide: NCPCR Suggests Tampering of Evidence but Remains Silent on 'Conversion' Angle People's Watch in Media Chennai

Chennai: In its inquiry report on the death by suicide of a minor girl in Ariyalur district in Tamil Nadu, the National Commission for Protection of Child Rights (NCPCR) said it found many “glaring issues” which should be investigated by...

#LavanyaDeathCase, #NCPCR, #Michaelpatti, #TheWire
26 Feb 2022 மைக்கேல்பட்டியைக் காப்போம் - ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் உரை People's Watch in Media Thanjavur

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களின் உரை

#media
26 Feb 2022 மைக்கேல்பட்டியைக் காப்போம்-ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் முனைவர். தொல். திருமாவளவன் MP உரை People's Watch in Media Thanjavur

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், MP அவர்களின் உரை

#SaveMichaelpatti, #Thirumavalavan, #DPI, #Michaelpatti, #LavanyaDeathCase
26 Feb 2022 மைக்கேல்பட்டியைக் காப்போம்-ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் மணப்பாறை MLA திரு.அப்துல்சமது உரை People's Watch in Media Thanjavur

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது, அவர்களின் உரை

#SaveMichaelpatti, #Michaelpatti, #MMK, #TMMK, #LavanyaDeathCase
26 Feb 2022 மைக்கேல்பட்டியைக் காப்போம்-ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் திருவடிகுடில் சுவாமிகள் தலைமை உரை People's Watch in Media Thanjavur

26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் ஜோதி இறைப்பணி தவத்திரு திருவடிகுடில் சுவாமிகள் அவர்களின் தலைமை உரை

#SaveMichaelpatti, #Michaelpatti, #LavanyaDeathCase
31 Jan 2022 சிபிஐ லட்சணம் தெரியாதா|இது முழுக்க அரசியல்|லாவண்யா மரணம் வழக்கு People's Watch in Media Madurai

லாவண்யா மரணம் வழக்கு - சிபிஐ மற்றும் NCPCR விசாரணை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் YouTube சேனலுக்கு பேட்டி

#LavanyaDeathCase, #NCPCR, #ArakalagamTV, #CBIEnquiry, #HenriTiphagne


Join us for our cause