மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடா்பாக மதுரையைத் தலைமையிடமாகக் கொ ண்டு இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மீது சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை சொக்கிகுளத்தில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1985இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில் அறக்கட்டளையில் கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிதி பரிவா்த்வா்த்தனைகளை மத்திய புலனாய்வுத்துத்துறை ஆய்வு செய்தது.
இதைத்தொடா்ந்து அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் கடந்த 2005- 2006, 2010- 2011 மற்றும் 2012- 2013 காலகட்டட் த்தில் வெளிநாடுகளில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் நன்கொடை பெற்றுள்ளதாக, சென்னை மத்திய புலனாய்வுத்துத்துறையின் கீழ் இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டட் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாடா் க மதுரையிலுள்ள தொண்டு நிறுவனத்தில் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினா்.