for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

16 Nov 2021 நடுக்கடலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறு ஆய்வை நடத்த உத்தரவ People's Watch in Media Madurai

’’மீனவர் சுட்டுட் க் கொல்லப்பட்டிட் ருந்தால், அதனை எளிதாக விட்டுட் விட இயலாது. உயிரிழந்த மீனவரின் மனைவியினது சந்தேகங்களை தீர்ப்ர் ப் து அரசின் கடமை என நீதிபதி கருத்து’’ கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுக்கடலில் அக்டோபர் 19 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார். இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில், இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது.  என்னிடமும், உறவினர்களிடம்  பெட்டியில் இருந்த  உடலை முழுவதும்  திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில்  காயங்கள் இருந்தது.  எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இறந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார். அரசுத்தரப்பில்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பிலேயே, கலந்தாலோசித்து விட்டு மறுஉடற்கூராய்வு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டனர். அதை தொடர்ந்து நீதிபதி, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், அதனை எளிதாக விட்டுவிட இயலாது. உயிரிழந்த மீனவரின் மனைவியினது சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை. ஆகவே, மீனவரின் உடல் புதைக்கப்பட்டுள்ள கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தடய அறிவியல் துறை மருத்துவர் தமிழ்மணி, மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன் மீனவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டார். உடற்கூராய்வின் போது, மனுதாரர் தரப்பில், ஓய்வு பெற்ற தடய அறிவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் உடனிருக்க அனுமதி வழங்கிய நீதிபதி, தாசில்தார் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் நவம்பர் 18ஆம் தேதி மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூராய்வு செய்யவும், அறிக்கையை நவம்பர் 24ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், மறு உடற்கூராய்வு  அறிக்கையை முன்பாகவே மனுதாரர் தரப்புக்கு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

#media
15 Nov 2021 Sedition, Farm Laws, Electoral Bonds: Over 200 Eminent Citizens Urge CJI to Hear Key Matters People's Watch in Media New Delhi

A letter to the CJI stresses that some of these matters, pending for as long as two years, affect several people's lives and livelihoods acutely.   The Wire Staff...

#media
12 Nov 2021 Lawyers oppose proposed transfer of Madras HC CJ to Meghalaya People's Watch in Media Madurai

“The instant transfer would quell any such efforts to strengthen the judiciary in the State... We request that the collegium may reconsider, in public interest, its decision,” the representation, signed by over 200 lawyers, said Over 200 lawyers...

#media
6 Nov 2021 தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக நினைவு சதுக்கம் அமைக்க கோரிக்கை People's Watch in Media Pudukottai

இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக தமிழக அரசு சார்பில் நினைவு சதுக்கம் அமைக்க வேண்டும்.பாம்பன் தீவுக்கவி அருளானந்தம் நினைவுக்கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் வலியுறுத்தல். நெய்தல் நிலத்தின் பெருந்தலைவரும், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு நட்புறவு பாலமாக விளங்கிய தீவுக்கவி யு.அருளானந்தம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இராமேஸ்வரம் – பாம்பன் பெரியநாயகி மகாலில் நவம்பர் 5 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மீனவர் சங்க தலைவர்கள், மக்கள் இயக்க தலைவர்கள் பங்கு கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர். “நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் நீவுக்கவி யு.அருளானந்தம் “என்ற நூலும், “நெய்தல் நதி தீவுக்கவி யு.அருளானந்தம்’ என்ற நூலும் இக்கூட்டத்தில் அவரது நினைவாக வெளியிடப்பட்டது. நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் தீவுக்கவி யு.அருளானந்தம் என்ற நூலை தேசிய மீனவர் பேரவைத் தலைவர் திரு.இளங்கோ, அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் திரு.ஆன்றன் கோமஸ், மக்கள் கண்காணிப்பகம் தலைவர்.வழக்கறிஞர்.கென்றி திபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட நூலை மறைந்த அருளானந்தம் அவர்களின் சகோதரர் யு.இருதையம் அவர்கள் பெற்றுக் கொண்டார். மீனவர் உரிமைக்கூட்டமைப்பு, பாம்பன் பரவர் நலப் பேரவை, சமம் குடிமக்கள் இயக்கம் மற்றும் அனைத்து மீனவர் சங்கங்கள் இணைந்து நடத்திய புகழ் அஞ்சலி கூடுகையை மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் சமம்.சி.சே.ராஜன் அவர்கள் ஒருங்கிணைத்தார்‌. ஒருங்கிணைப்புக் குழுவில் பாம்பன்.கேவிஸ்டன், ஜே.அருளானந்தம், கனிஷ்டன், முடியப்பன், லிடிஸ், ரோவன் தல்மேதா போன்றோர் செயல்பட்டனர். மறைந்த அருளானந்தம் அவர்களின் உருவப்படத்திற்கு பாம்பன் பரவர்நலப்பேரவை தலைவர் திரு.எஸ்.ஏ. பவுல் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து மீனவர் சங்க தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத்தலைவர் சேசுராஜ், எஸ்.பி.ராயப்பன்,பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், மூக்கையூர் ஜான், இருதைய மேரி, ராக்கினி, மகத்துவம், சைமன், ஜெரோம், வழக்கறிஞர் ஜான்சன், மற்றும் எழுத்தாளர். குறும்பனை பெர்லின், பேரா.அந்தோனி ராஜ், அருட்தந்தை சர்சில், அருட்தந்தை பிரிட்டோ, ஹென்றிடிபேன், ஆண்டன் கோமஸ், இளங்கோ என பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். நவம்பர் 21 அகில உலக மீனவர் தினத்தனற்று தமிழகம் முழுவதும் தீவுக்கவி அவர்களை நினைவுக்கூறுவது என்றும்; மறைந்த தீவுக்கவி. அருளானந்தம் அவர்கள் எழுதி வெளி வராமல் இருக்கும் மீனவர் வரலாறு குறித்த நூலை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை கொண்டு வெளியிடுவது என்றும்; திரு.அருளானந்தம் அவர்கள் பெயரில் பாம்பனில் நூலகம் துவங்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும்,மீனவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்துவது என்றும்; இலங்கை கடற்படையால் உயிரிழந்த அனைத்து மீனவர்களின் நினைவாக நினைவுசதுக்கம் தங்கச்சி மடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது‌ மீனவர் உரிமைக்கூட்டமைப்பு சார்பில் ரோவன் தலாமேதா நன்றிக் கூறினார்.

#media


Join us for our cause