for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

14 Jun 2022 Kodungaiyur custodial death: Family claims injuries on body, SHRC orders report from Chennai top cop People's Watch in Media Chennai

........................................ Meanwhile, People's Watch executive director Henri Tiphagne said the inspector involved in the case already had two SHRC complaints against him. He said that Rajasekar had been kept at a police outpost at night despite the...

##TheNewIndianExpress, ##CustodialDeath, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu
13 Jun 2022 பத்திரிகை செய்தி: தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன்வந்து (suo moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும். Press Releases Madurai

தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.   சென்னை உயர்நீதிமன்றம் அப்பு (எ) ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன் வந்து (Suo-Moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும். சம்பவ நாளன்றே தொடர்புடைய காவலர்களை பணியிடை...

##CustodialDeath, ##PoliceTorture, ##PressRelease, ##ExtraJudicialKilling, ##EJK, ##PoliceViolence, ##Rajasekar@Appu
13 Jun 2022 தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் - காரணம் என்ன? People's Watch in Media Chennai

.................................... இதில் காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை; மேலதிகாரிகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இந்த மரணத்தைப் பொறுத்தவரை, பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், இறந்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்" என்கிறார் அவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டபோது, "இந்த அரசை ஒரு கவனக் குறைவான அரசு என்று சொல்ல மாட்டேன். ஆனால், விக்னேஷ் வழக்கு போன்ற சில தருணங்களில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். வேறு தலையீடுகள் இருக்கலாம். ஆனால், தற்போதைய வழக்கில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கைதி இறந்த அன்றே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பல வழக்குகளில் நாங்கள் இதற்காக 3 வருடமெல்லாம் வழக்கு நடத்தியிருக்கிறோம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றே இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அதுவும் ஆய்வாளரே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்கிறார் ஹென்றி. ...........................................

#CustodialDeath, #PoliceTorture, #HenriTiphagne, #DeathinCustody, #ExtraJudicialKilling, #EJK, #ChennaiPolice, #Rajasekar, #Appu, ##BBCTamil
13 Jun 2022 அடுத்தடுத்த லாக் அப் மரணங்கள்.. என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? சமூக ஆர்வலர்கள் விமர்சனம்! People's Watch in Media Chennai

.................................... அதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் அதன் புறக்காவல் நிலையம் ஆகியவற்றில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு கோரியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் லாக் அப் மரணங்கள் இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .....................................  

##CustodialDeath, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu, ##OneTamil
13 Jun 2022 சென்னை கமிஷனர் பணியிட மாற்றம்? டிஜிபி உத்தரவை மீறியதால் நடவடிக்கை..! People's Watch in Media Chennai

காவல் நிலையத்தில் ராஜசேகர் மரணமடைந்ததை சென்னை உயர்நீதிமன்றமும், மாநில மனித உரிமைஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை. கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், சம்பவத்தன்றே காவல்துறை இயக்குநர் தலையீடு செய்து இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, வழக்குப்பதிவு செய்ததை வரவேற்பதாகவும், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நடவடிக்கைகள் முதன் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது எனவும், ராஜசேகர் காவல் மரணத்தின் தொடர்புடைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சார்பு ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுவதாகவும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஏற்கனவே மாநில மனித உரிமை ஆணையத்தால் அவருக்கு எதிராக பரிந்துரை பெறப்பட்டுள்ளதோடு, மேலும் மற்றுமொரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் குற்றவாளியாக இருக்கிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என்ற காவல்துறை இயக்குனரின் உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடைபிடிக்க மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த மரணத்திற்கு காவல் ஆணையர் சங்கர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ....................................  

##CustodialDeath, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu, ##TamilSamayam, ##TimesofIndiaTamil
13 Jun 2022 Yet Another Custodial Death in Tamil Nadu; Ex-Cops, Activists Demand Stern Action People's Watch in Media Chennai

..................... “This kind of action is unprecedented; it has been very swift. I think it is because of the pressure that the death of Vignesh had created,” says I. Aseervatham, human rights activist working on custodial torture issues. The...

##CustodialDeath, ##TheWire, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu


Join us for our cause