for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

25 Jun 2021 Alarming that police fired at unarmed protestors and no one is booked for 3 years: Madras High Court seeks 2018 NHRC probe report People's Watch in Media Madurai, Tamil Nadu

The Madras High Court on Friday directed the National Human Rights Commission (NHRC) to forward a copy of its "undisclosed" investigation report into the 2018 police firing incident at Thoothukudi, in which 16 persons were reportedly killed while protesting...

#BarandBench, #Sterlite, #NHRC, #ThoothukudiFiring, ##HighCourtOrder, ##HighCourt, #HenriTiphagne, #PoliceFiring
25 Jun 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறக் கூடாது: உயர் நீதிமன்றம் கருத்து People's Watch in Media Madurai, Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறக் கூடாது: உயர் நீதிமன்றம் கருத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறக் கூடாது என, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல...

#Sterlite, #NHRC, #TheHinduTamil, #ThoothukudiFiring, #ThoothukudiPoliceFiring, #HenriTiphagne, ##HighCourtDirection
25 Jun 2021 Sterlite Protests: Madras High Court Calls For Probe Reports Of NHRC- Calls The Inaction "Alarming". People's Watch in Media

The Madurai Bench of Madras High Court issued notice to the State Government and the National Human Rights Commission (NHRC) today in a plea for disclosure of NHRC's "undisclosed" 2018 investigation report into police firing following the Sterlite Protests...

#HenriTiphagne, #PeoplesWatch, #LiveLaw, #NHRC, #ThoothukudiPoliceFiring
25 Jun 2021 நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு ஏற்புடையதா? – மதுரைக்கிளை கேள்வி ..! People's Watch in Media Madurai, Tamil Nadu

ஒரு நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? என மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ............. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது , போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

##AdvocateHenriTiphagne, ##HenriTiphagne, ##ThoothukudiPoliceFiring, ##SterliteCase, ##Dinasuvadu
15 Jun 2021 விசாரணைக்கு சென்ற இளைஞர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் People's Watch in Media Madurai, Tamil Nadu

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன். இவரை கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் கடந்த 2019-ல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாலமுருகன் மர்மமான முறையில் இறந்தார். விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் பாலமுருகன் இறந்ததாகவும், பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முத்துக்கருப்பன் மனு தாக்கல் செய்தார். பின்னர் இவர் மனுவை திரும்பப் பெற்றார். இந்நிலையில் போலீஸார் மிரட்டியதால் மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் புகார் அளித்தார். இதையடுத்து பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றிடிபேன் கேட்டுக் கொண்டார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

#TheHindu, #HighCourtOrder, #HenriTiphagne, #People'sWatch, ##BalamuruganCustodialDeath, ##Avaniyapuram, #MaduraiBenchoftheMadrasHighCourt, #Direction, #InterimOrder, ##AdvocateHenriTiphagne
6 Jun 2021 அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கக் கோரும் மக்கள் கண்காணிப்பகம் People's Watch in Media Madurai

தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், "தேர்தல் காலத்தில், திமுக சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களுக்கு குடிமைச் சமூகத்தைச் சார்ந்தோர், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வளர்ச்சிப்பணியில் திறன்படைத்தோர் போன்றோர் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இவர்களை அடையாளங்கண்டு, கடந்த காலத்தில் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பெற்ற ஆலோசனைக்குழுவைப் போல் வெவ்வெறு துறைகளில் திறன் படைத்தோர் அடங்கிய ஒரு மாநிலக்குழுவை அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு உதவியாக ஒரு துணைக் குழுவையும் அமைக்கவேண்டும். இக்குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்தவற்றை அரசின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்துரைத்து அதற்கான பரிந்துரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். இறுதியாக எதிர்க்கட்சியினர் முதல் நூறு நாட்கள் அரசுடன் இணைந்து செயல்படுவது அரசியல் நாகரிகம் என்று எடுத்துரைக்கிறோம். ஜனநாயக நெறிமுறைகளுக்கிணங்க அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவேண்டும். மக்கள் பணியில் அறமற்ற செயல் பொருளற்றது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் அண்மையில் திமுக அரசு அறிவித்த அறிவிப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதற்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

#ETV, #PeoplesWatch, #MKStalin, #CM TamilNadu
6 Jun 2021 அரசுக்கு ஆலோசனை- சமூக செயற்பாட்டாளர்கள் குழு அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஹென்றி திபேன் வேண்டுகோள் People's Watch in Media Madurai

சென்னை: தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். இது...

#ThatsTamil, #OneIndia, #MKStalin, #Appeal, #GovtofTN
5 Jun 2021 திமுக புதிய ஆட்சி பொறுப்பேற்று முப்பது நாட்கள் (மே 7 முதல் ஜூன் 7 வரை) முடியுந் தறுவாயில் மக்கள் கண்காணிப்பகம் விடுகின்ற திறந்த மடல் Press Releases Madurai

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட  வேண்டும். இது தான் சனநாயக மரபின்  நடைமுறையில் இருக்கும் அரசியல் ஒழுக்க முறைமை, நியதி ஆகும். ஆனால் தமிழகத்தில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் இந்த அரசைப் பற்றி எதிர்க்கட்சியும், பாரதிய சனதாவும் தொலைக்காட்சிகளில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைப்பது, அநாகரிகமாகப் பேசுவது அரசியல் அறமற்ற செயலாகும்.    புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் நூறு நாட்கள், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறவேண்டிய நேரம்.  சனநாயக நெறிமுறைப்படி புதிய அரசு  அமைத்துள்ள “அனைத்துக்கட்சிக் குழுவில்” ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக், கருத்துகளை   எடுத்துரைப்பது தான் அராசியல் நாகரிகம் ஆகும். இதைவிடுத்து பொதுவெளியில் குற்றம் சாட்டுவது வெறுப்பரசியலாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகிறது.       குடிமைச்சமூகத்தின் நேர்கொண்ட பார்வை: ஓர் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நேர்மையான செயற்பாடுகளைப்  பாராட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும், தார்மீக உரிமையும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு உள்ளது.  குடிமைச்சமூக அமைப்பு என்பதை அரசு சாரா அமைப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம். அவர்கள் மனித  உரிமைகளுக்காக, மீறல்களுக்கெதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள், குறிப்பாக அரசியல் கட்சிகளைச்  சாராதோர் ஆவர். திமுகவின் வெற்றிக்கு அதன் கட்சியினர் மட்டும் காரணமல்ல. குடிமைச்சமூகத்தினர், எட்டுவழிசசாலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், குடியுரிமைத் திருத்தச்சட்டம்  போன்றவற்றிற்கு எதிராகப் போராடியோர், தொழிற்சங்கத்தினர், பெண்ணுரிமை அமைப்பினர் மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவோர், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றுவோர், தமிழ்த் தேசிய கருத்துகளை முன் வைத்து பணியாற்றுவோர்,  ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்தோர் இவர்கள் அனைவரும்  மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். இவர்கள்  அளித்த வாக்குகளும் சேர்ந்து வெற்றிக்கு வித்திட்டு புதிய அரசைப் பொறுப்பேற்க வைத்துள்ளது என்பதை இங்கே நினைகூர விரும்புகிறோம்.

#DMK, #TNGovt, #PeoplesWatch, #Appeal


Join us for our cause