Media
Human rights organisations and political parties are demanding that an FIR be filed against IPS officer Singh. Henri Tiphagne, executive director, People’s Watch, said that either the district collector or the superintendent of police should have obtained the CCTV...
பாஜகவின் இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது எம். எல். ஏ. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் கே. ஆர். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் அருணன், மதிமுகவின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பூமிநாதன் எம். எல். ஏ. மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வே. கனியமுதன், மக்கள் விடுதலை கட்சியின் க. க. முருகவேள் ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம். எஸ். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
பிபிசி தமிழிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநருமான ஹென்றி டிஃபேன், முதல் முதலாக இந்த பல்பிடுங்கும் குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்த ஒருவர் விவகாரத்தில் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் கழுவி அகற்றப்பட்டதாகவும், ஆனால், இந்த விவகாரம் குறித்து தனிப்பிரிவு காவலர்கூட எஸ்.பி.க்கு தகவல் தரவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் போகன் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
...
திருநெல்வேலி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பு இயக்குனர் ஹென்றி டிபேன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உள்பட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு வருபவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பொறுப்பேற்ற நாளில் இருந்து சித்ரவதை செய்துள்ளார். இதனை பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சாட்சிகள் மூலம் அறிய முடிகிறது. இதுவரை 48 நபர்களின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
...
We have sought CCTV footage under RTI: People’s Watch Meanwhile, two human rights organisations, People’s Watch and Joint Action Against Custodial Torture, have sought CCTV footage of Ambasamudram police station, one of the three stations where the alleged...