Media
Pudukkottai activist murder: Cops deny protest seeking justice for Jagaber Ali HRDA has sought a transfer of the Jagaber Ali murder case to the CB-CID Special Police Department under the supervision of the High Court and compensation...
Can the new NHRC Chairman anchor a rudderless vessel? The 'A' status for the Indian NHRC has been deferred three times, for non-compliance with some of the Paris Principles for human rights bodies. Henri Tiphagne, Edgar...
VCK chief accuses Sangh Parivar of meddling in Thiruparankundram Hill row Thol Thirumavalavan urged religious leaders, saints, and mutt heads to condemn the political misuse of religion. MADURAI: VCK chief Thol Thirumavalavan accused the Sangh Parivar of...
சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கும் சங்பரிவார் இயக்கங்கள்” - திருமாவளவன் குற்றச்சாட்டு இந்தியாவில் சிறுபான்மையினர் மீது சங்பரிவார் இயக்கங்கள் வெறுப்பை விதைக்கின்றன என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை, கேகேநகரில் உள்ள நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கில், மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் இன்று மதநல்லிணக்க மாநாடு நடந்தது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திருப்பரங்குன்றத்தில் இந்த மாநாட்டை நடத்த அனுமதி கேட்கவில்லை. மதுரை மாநகருக்குள் நடத்த அனுமதி கேட்டும் போலீசார் கொடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மத நல்லிணக்கத்தை விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடந்தும், முதல்வர் இருந்தும் அனுமதி வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு முதல்வர் மதவாத சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதுரை மாநகர காவல்துறை மற்றும் ஆட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். ................................................................................. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுக்கு ஆதரவாக, எதிராக செயல்படும் பிரிவுகளும் உண்டு. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எந்த மேடையிலும் முன்னால் இருக்க மாட்டார்கள். ஆனால், அதிகார வர்க்கத்தில் உள்ள டாக்டர்கள், சினிமா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து மூளைச் சலவை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும் இதை செய்து அதிகாரிகளையும் மாற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மதுரையில் நடந்த பிரச்சினையாகச் சொல்லவில்லை. நாடு முழுவதும் நடக்கிறது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
மத நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும் மக்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், என் இறைவனுக்கும். என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனி மனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் கருதாமல், சமூக பிரச்சினையாக கருத வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன், வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன்,. மீ.த.பாண்டியன், மதிமுக நிர்வாகி செந்தில் அதிபன், ஆயர் லாரன்ஸ் பயஸ், சுப.உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு. ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இஸ்லாமியர்களின் தர்கா வழிபாடு என கூட்டு வழிபாட்டு இடமாக திருப்பரங்குன்றம் மலை இருக்கிறது. இதை மத நல்லிணக்க மலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை பாதுகாக்க மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மத நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள் - திருமாவளவன் பேச்சு! நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வின் அடிப்படையில் சுதந்திர போரில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம், ஆனால் இங்கே பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள் என மதநல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. மத நல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு ஒவ்வொருக்கு அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையில் நாம் தலையிடவில்லை, அதனை பின்பற்றினால் மதநல்லிணக்கம் துளிர்க்கும் அதை புரிந்து கொள்ளத்தான் இந்த மாநாடு, நாம் இந்து சமூகத்தை விமர்ச்சிக்கிறோம், கூறுகிறார்கள், இந்து மத நம்பிக்கை வேறு, இந்து மத நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு, மதக் குரு மார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். மதத்தை கையில் எழுத்து மதத்திற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சனை எழுகிறது. இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டியது இந்து மதப்பற்றாளர்கள், குருக்கள், மத சார்ந்தவர்கள்தான், சங்கராசாரியார்கள் பாஜகவை கண்டிக்காமல் இருக்கிறார்கள்.
