for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

15 Dec 2025 திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத நல்லிணக்க அமைதிப்பேரணி: சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பு People's Watch in Media Madurai

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத நல்லிணக்க அமைதிப்பேரணி: சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பு மதுரை: மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற என்ற பாஜ மற்றும் இந்துத்வா அமைப்புகளின் வலியுறுத்தலைக் கண்டித்து மதுரையில் நேற்று அமைதி நல்லிணக்கப் பேரணி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பாஜ மற்றும் இந்துத்வா அமைப்புகளின் வலியுறுத்தலைக் கண்டித்து மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் நேற்று மத நல்லிணக்க அமைதிப் பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் ெதாடங்கிய இப்பேரணி உலகத் தமிழ் சங்கம் வரை நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி, விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மக்கள் கண்காணிப்பாக்கம் வழக்கறிஞர் ஹென்றி திபேன், மமக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், சர்வ சமயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர். இவர்கள், மத நல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் அனைவரின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இஸ்லாமிய பெண்களும் திரளாக பங்கேற்றனர்.

##Dinakaran, ##Tiruparankundram, ##Madurai, ##HenriTiphagne
7 Dec 2025 When law lets down the defenceless People's Watch in Media Madurai

##TheHindu, ##Hindu, ##TH, ##HariParanthaman, ##SCSTAct, ##Henri, ##HenriTiphagne
25 Oct 2025 தமிழ்நா ட்டிற்கு புதிய டிஜிபி நியமனத்தில் தா மதம் ஏன்? முழு விவரம் People's Watch in Media Madurai

தமிழ்நா ட்டிற்கு புதிய டிஜிபி நியமனத்தில் தா மதம் ஏன்? முழு விவரம்   தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சேர்ந்த 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த செப்டெம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். 'டிஜிபி பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதிய நியமனம் தொடர்பாக தகுதியுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்துக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தமிழ்நாடு அரசு செய்யவில்லை' என, மனுவில் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

##BBC, ##dgp, ##cmstalin, ##MKStalin, ##TNPolice, ##Court
13 Oct 2025 மக்கள் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் அதன் இயக்குனர் ஹென்றி திபேன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் People's Watch in Media Madurai

மக்கள் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் அதன் இயக்குனர் ஹென்றி திபேன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்    

##PublicApp, ##BombThreat, ##Madurai, ##PeoplesWatch, ##HenriTiphagne, ##MaduraiPolice


Join us for our cause