Media

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் செய்தியாளர் சந்திப்பு

...

பல் பிடுங்கிய விவகாரம் காவல் நிலையங்களில் இங்கெல்லாம் CCTV Camera இருக்க வேண்டும் ஹென்றி திபேன் @PuthiyaThalaimuraiTV

அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து இரண்டாம் கட்டமாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.17) விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "அம்பாசமுத்திரம் பகுதியில் வன்கொடுமை என்பது நடைபெற்று உள்ளது. விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் in சென்று பற்களை பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அப்போதே மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் 4 நிலையத்திற்கு நேரடியாக சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பறிமுதல் செய்து இருக்க வேண்டும். அப்படி பறிமுதல் செய்திருந்தால் இந்த விசாரணையே தற்போது தேவையில்லை. உச்ச நீதிமன்றத்தில் காவல் நிலையத்தில் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள் எதுவுமே அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மூன்று கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் காவல் இ நிலையத்தின் உள்ளேயும் வெளியேவும் அனைத்து பகுதிகளிலுமே கண்காணிப்பு கேமராவினைப் பொறுத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெல்லை ஸ்ரீ மாவட்டத்தில் 213 கேமராக்கள் தான் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் கொடுத்துள்ளார்கள். அம்பாசமுத்திரத்தில் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கையாகும்" என அவர் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்தால் போதாது உடனடியாக கைது செய்யுங்கள் கொந்தளித்த ஹென்றிதிபேன் | மக்கள் கண்காணிப்பகம்

பல்வீர் சிங்கை விரைந்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பல்வீர் சிங்கின் கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக நிலைக்கும் என கூறினார்.

அதை செய்தது பல்வீர் சிங் மட்டும் தான் உண்மையை வெளிப்படுத்திய ஹென்றி திபேன் @News18Tamilnadu

The People’s Watch advocates protested the presence of Special Branch police inside the taluk office where the inquiry is going on. Henry Tiphagne, executive director of People’s Watch, who came to the taluk office in the afternoon, said...

நெல்லை மாவட்ட ஆட்சியரே தவறு செய்திருக்கிறார் | மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் @JayaPlusNews

Commenting on the FIR filed against Singh, executive director of People's Watch, Henry Tiphagne, who accompanied some SC victims to the inquiry, demanded the arrest of the IPS officer. "We will bring up the Ambasamudram police station CCTV...