for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

2 Jul 2025 இளைஞர் அஜித்குமார் மரணம் | “தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை” - ஹென்றி திஃபேன் பரபரப்புப் பேட்டி People's Watch in Media Madurai

இளைஞர் அஜித்குமார் மரணம் | “தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை” - ஹென்றி திஃபேன் பரபரப்புப் பேட்டி சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். Published on:  01 Jul 2025, 6:45 pm சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹென்றி தீஃபேன், “எஃப்ஐஆர் இல்லாமலேயே விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் கூட கொடுக்காமல் மிளகாய் பொடு போட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சித்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.  

##PuthiyaThalaimurai, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன் People's Watch in Media Madurai

அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன் அஜித்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பது குறித்துப் பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது. ..................................................  

##Vikatan, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் Press Releases Madurai

Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனையும் நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து வந்தோம். அவரும் அந்த கோவிலில்தான் பணியாற்றுகிறார். அஜித் குமாரின் தூரத்து சொந்தக்காரர் அவர். அந்த வீடியோவை எடுக்கும்போதே பதைபதைப்புடனும் அச்சதோடும்தான் எடுத்திருக்கிறார்." - ஹென்றி திபேன். .................................................................

##Vikatan, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை People's Watch in Media Madurai

"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு. .................................................. நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ................................ முன்னதாக அஜித்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது. .........................

##BBC, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
1 Jul 2025 திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்கொமல் கண்களில் மிளகொய்ப் பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்கொமல் கண்களில் மிளகொய்ப் பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன் திருப்புவனம் லாக்கப் மரணம் வழக்கு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ........................................................................ இந்த நிலையில் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், "மானாமதுரை டி.எஸ்.பி- யின் கீழ் செயல்படுகின்ற தலைமை கான்ஸ்டபிள் வழிநடத்துகிற ஒரு தனிப்படையிடம் எஃப்.ஐ.ஆருக்கு முன்பாகவே விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், அஜித்குமார், அவரின் தம்பி நவீன், அருண் மற்றும் இருவரை 27-ம் தேதி இரவு முதல், 28-ம் தேதி காலை வரை திருப்புவனத்தை சுற்றியுள்ள 4 பகுதிகளுக்குக் கூட்டிச்சென்று மிகக் கொடூரமான சித்ரவதைகளைச் செய்தார்கள். இறுதியாக மடப்புரம் கோயில் பின்பக்கத்தில் இருக்கின்ற ஒரு மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை கூட்டிச் சென்று, ஒளித்து வைத்திருக்கின்ற நகை எங்கே என்று கேட்டு, அது கிடைக்கவில்லை என்றவுடன் அவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கண்களிலும் வாயிலும் மிளகாய்ப்பொடி தூவினார்கள். அதை கோயிலில் இருக்கின்ற பாத்ரூமில் இருந்து நேரடியாகப் பார்த்து வீடியோ எடுத்தது கோயிலில் வேலைசெய்யக்கூடிய சதீஷ்வரன். அதை அவர் வழக்கறிஞர்களிடம் கொடுத்து, இன்று நீதிமன்றத்தில் கொடுத்ததில் அங்கே நடந்ததை நீதிபதிகள் பார்க்க முடிந்தது. காவல் நிலையத்தில் இருக்கின்ற சிசிடிவி காட்சிகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று அரசு தரப்பில் கூறினார்கள். ஆனால், கோயிலில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை அழிக்கும் நோக்கில் 29-ம் தேதி காலையில் ராமச்சந்திரன் என்கின்ற உதவி ஆய்வாளர் அங்கே வந்து காட்சிகளைப் பறித்துச் சென்றார் என்று கூறப்பட்டது. அதன்பிறகு, உடற்கூராய்வு அறிக்கையை டீன் கொடுக்கவில்லை என்று புகாரின் காரணத்தினால், அவரை வரவழைத்து அவரிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கவரில் வாங்கப்பட்ட உடற்கூராய்வு முதல்நிலை அறிக்கையில் 44 கொடூர காயங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். ஒரு கொலையில் கூட இவ்வளவு காயங்கள் இருக்காது என்று நீதிபதி குறிப்பிட்டார். அதையடுத்து இது நடக்கக் கூடாத சித்ரவதை, வன்முறை என்று அரசு ஏற்றுக்கொள்கிறது என அரசு தரப்பு கூறியது. இறுதியாக மதுரை நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நீதிபதிகள் நியமனம் செய்து, அவரிடம் அனைத்து சாட்சியங்களையும் இரண்டு மூன்று நாட்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை அவர் ஆய்வு செய்து ஜூலை 8-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்.   மேலும், அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை தொடரும் என்றும் அதே தேதிக்கு முன்பாக விசாரணை நிலை அறிக்கையைக் கொடுப்போம் என்றும் அரசு தரப்பு கூற, அரசு இன்னும் மேல் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்" என்று கூறினார்.

##Vikatan, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne
1 Jul 2025 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்? அதிர வைக்கும் தகவல்! People's Watch in Media Madurai

10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்? அதிர வைக்கும் தகவல்! சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2025 ஜூன் 27 அன்று நடந்ததாகக் கூறப்படும் நகை திருட்டு சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கில், கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்பவர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது உயிரிழந்தார். .................................................................... அஜித்குமாரை தாக்கும் வீடியோவை வழக்கறிஞர் ஹென்றி திபேன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார், மேலும் இந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகி, பயம் காரணமாக தான் தப்பி ஓடியதாகக் கூறினார்.  .................................................................

##Tamizhakam, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
1 Jul 2025 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்? அதிர வைக்கும் தகவல்! People's Watch in Media Madurai

10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்? அதிர வைக்கும் தகவல்! சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2025 ஜூன் 27 அன்று நடந்ததாகக் கூறப்படும் நகை திருட்டு சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கில், கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்பவர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது உயிரிழந்தார்.   ....................................................... அஜித்குமாரை தாக்கும் வீடியோவை வழக்கறிஞர் ஹென்றி திபேன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார், மேலும் இந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகி, பயம் காரணமாக தான் தப்பி ஓடியதாகக் கூறினார்.  ...........................................

##Tamizhakam, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan


Join us for our cause