Media

The detailed post-mortem report of the 17-year-old boy who was beaten to death in the Government Observation Home in Chengalpattu last year stated that the body bore 95 injuries, most of them being contusions and abrasions. The juvenile,...

People’s Watch, a non-governmental organisation, on Monday condemned the inhuman treatment meted out to a group of persons accused in an attempt to murder case by a team of police officers, led by Ambasamudram Assistant Superintendent of Police Balveer...

People’s Watch strongly condemns the barbarous, vicious and treacherous acts of torture and inhuman and degrading treatment undertaken by Mr. Balveer Singh IPS, the Additional Superintendent of Police, Ambasamudram of Tirunelveli District, Tamil Nadu as is just now revealed...

சாத்தான்குளம் காவல் சித்திரவதையை விட கொடுமையான 96 கொடூர காயங்களுடன் செங்கல்பட்டு அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 31.12.2022 அன்று 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் குறித்து, அவனது அம்மா பிரியா 27.03.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்..


மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம் அப்போது, கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது என்று சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது தீர்ப்பு ஒத்திவைப்பு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது என்று மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

The 86th birth anniversary of Rev. Dhaynchand Carr, former Principal of Tamil Nadu Theological Seminary, Madurai, was held here. Bishops of South India Rev. Chandrasekaran and Rev. Jayasingh Prince Prabakaran offered felicitations, extolling the many facets of Rev. Carr...


ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதை பலரும் பாராட்டி வரும் நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காவல்துறையினர் சுட்டு கொலை செய்வதற்கு பதிலாக பிடித்துள்ளார்கள் என்று சொல்வதே நல்லது. ஆனால் அதற்கும் சட்டத்தில் இல்லை. ஏனென்றால் இது போன்று தொடர்ந்து காவல்துறையினர் செய்வதற்கு வாய்ப்பாக அமைய கூடாது என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் கூறியுள்ளார். மேலும் ஆயுதங்களை பயன்படுத்தி எந்த ஒரு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறவில்லை எனவும், மாறாக குற்றவாளிகள் அதிக பலத்துடன் இருக்கும் போது அதற்கு சமமான பலத்துடன் சென்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காவல்துறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது, சுட்டு பிடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் இது கண்டிக்கத்தக்க விஷயம் எனவும் அவர் கூறினார்.