for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

29 Nov 2023 மாணவிக்கு மதரீதியிலான துன்புறுத்தல்: ஆசிரியர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை People's Watch in Media

கோவை, துடியலூரில் அரசுப் பள்ளி மாணவிக்கு மதரீதியில் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியின் பயிற்சி ஆசிரியை ஒருவர் மதரீதியிலான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பு ஆசிரியரும் அந்த மாணவியை இழிவுபடுத்தி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியர் ஆகியோர் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடமும் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதும், குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுக்கப்படுவதும் நமது சமூகத்துக்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகளின் உரிமையை மீறுவதாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக் கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை தமிழக அரசு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், குழந்தைகள் நல அலுவலரின் செயல்பாடுகள் குறித்து அரசு அறிக்கை கேட்பதுடன், சம்பந்தப்பட்ட சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #SHRC, #TNGovt, #SchoolDiscrimination, #MinorityDiscrimination, #ThudiyalurGovtSchool, #MadrasHighCourt, #மனிதஉரிமைகள்ஆணையம், #சென்னைஉயர்நீதிமன்றம், #பாகுபாடு, #பள்ளிமாணவிபாகுபாடு
28 Nov 2023 கோவை, துடியலூர், அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது வெறுப்புணர்வோடு நடந்து தாக்குதல் நடத்திய பயிற்சி ஆசிரியையை விசாரணைக்கு உட்படுத்துக. பயிற்சி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர Press Releases

கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

#media
28 Nov 2023 SHRC urged to take suo moto cognizance of handcuffing of Pocso case victim People's Watch in Media

People’s Watch, a Madurai-based human rights organisation has sought the intervention of State Human Rights Commission to take suo moto cognizance of the inhumane police action of handcuffing a Pocso case victim in The Nilgiris district earlier this month....

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #POCSO, #POCSOAct, #HandCuff, #OotyPolice
27 Nov 2023 போக்ஸோ (POCSO) வழக்கில் பாதிப்பிற்குள்ளான சிறுமியை கை விலங்கிட்டு பெண் காவலர் அழைத்துச் சென்ற சம்பவத்தினை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து (Suo-Moto) விசாரிக்கக் கோரி மக்கள் கண்காணி Press Releases

கடந்த 21.11.2023 அன்று மாநிலம் முழுவதும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் செய்தியில், 07.11.2023 அன்று பெண் காவலர் ஒருவர், போக்ஸோ (POCSO Act) வழக்கில் பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காக, ஊட்டியில் உள்ள அன்னை சத்யா இல்லத்தில் இருந்து கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பெண் காவலர் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, கிட்டத்தட்ட 400 மீட்டர் நடந்தவாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். நீதிமன்ற வாசலில் மட்டும் கை விலங்கை அகற்றி, 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றவுடன், மீண்டும் அச்சிறுமிக்கு கை விலங்கிட்டு, பொது சாலையில் பேருந்து நிலையம் வரை நடக்க வைத்தது என்பது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கிறது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து (Suo-Moto)  இவ்வழக்கினை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியதோடு, மனித உரிமைகள் திருத்தச் சட்டம், 2019 பிரிவு 12 (A) இன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தாமாக முன் வந்து (Suo-Moto)  விசாரணைக்கு எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் 25.11.2023 அன்று மனு அனுப்பிள்ளது.  

#media
27 Nov 2023 POCSO victim 'taken handcuffed' to court: Madras HC 'must take suo moto cognisance' People's Watch in Media

Henri Tiphagne, director of the human rights organisation People’s Watch, based in Madurai, has taken strong exception to a woman constable taking a 15-year-old Protection of Children from Sexual Offences (POCSO) Act victim to the court handcuffed to record...

#POCSOAct, #POCSO, #HandCuff, #போக்சோ, #போக்சோவழக்கு, #கைவிலங்கு, #HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம்
25 Nov 2023 People’s Watch appeal to the Hon’ble Chief Justice of Madras High Court and Chairperson of Tamil Nadu Human Rights Commission to take suo-moto action in the case of POCSO victim hand cuffed by women police Press Releases

People’s Watch sent representation to seeking suo-moto action to Chief Justice of Madras High Court and urged Tamil Nadu State Human Rights Commission to take suo-moto cognizance under section 12 (a) of the Protection of Human Rights (Amendment) Act,...

#media


Join us for our cause