for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

12 Jan 2023 NGO seeks justice for custodial death of 17-year-old in Tamil Nadu People's Watch in Media Madurai

MADURAI: People’s Watch, a human rights NGO based in Madurai, has urged the Chengalpattu district collector to directly inquire into the mysterious death of a 17-year-old juvenile at a juvenile correction facility. The deceased, Gokul Sri, was a...

#Gokulsri, #ObservationHome, #Torture, #ChildRights, #ViolenceAgainstChildren, ###CustodialDeath, #JuvenileJustice, #Juvenile, #TOI, #TimesofIndia
12 Jan 2023 செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ படுகொலை மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு People's Watch in Media

செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல்ஸ்ரீ என்ற  சிறுவன்  சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக  மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை அந்த சிறுவனை கைதுசெய்த ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிறுவனை காவல்துறை யினர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் அந்த சிறுவனை தாயார் சந்தித்துப்பேசிய நல்ல உடல்நிலையோடு இருந்தான். இந்நிலையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோகுல்ஸ்ரீ படு கொலை செய்யப்பட்டுள்ளான். இதற்கு சான்றாக உடலின் பல இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு இந்த வழக்கை அரசு  மாற்றியுள்ளது. இந்த சிறுவன் மட்டுமல்ல அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. அந்த இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறுவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.   சாட்சிகளை மிரட்டிவரும் செங்கல்  பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  மாவட்ட ஆட்சியர்  தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது உடன்  சித்திரவதைக்குள்ளான 4 சிறார்களின் காயத்தையும் மருத்துவக்கு குழுவுடன் ஆய்வு செய்யவேண்டும்.  அதிகாரி சிவக்குமாரின் மிரட்டலுக்கு உள்ளான  சிறுவனின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #ObservationHome, #ChengalpatObservationHome, #செங்கல்பட்டுசிறார்இல்லம்
12 Jan 2023 Initiate probe into death of 17-year-old at juvenile home: Evidence People's Watch in Media Madurai

MADURAI: People's Watch Executive Director Henri Tiphagne has urged Chengalpattu District Collector AR Rahul Nadh to inspect the juvenile home and inquire into the death of a 17-year-old boy. Railway police spotted the boy at Tambaram junction on December 29...

#Gokulsri, #ObservationHome, #TNIE, #TheNewIndianExpress, #Torture, #ChildRights, #ViolenceAgainstWomen, #CustodialDeath, #JuvenileJustice, #Juvenile, #CorrectionalHome
11 Jan 2023 Appoint single judge to probe excrement in water tank case: NGO People's Watch in Media Madurai

On December 27, Collector Kavitha Ramu and Superintendent of Police Vandita Pandey visited the villagers and were informed of the discrimination faced by the villagers, he said. MADURAI: People’s Watch (an NGO) executive director Henri Tiphagne condemned the...

#TNIE, ##TheNewIndianExpress, #Pudukottai, #Eraiyur, #Vengaivayal, #SC/ST, #CasteDiscrimination, #MLA, #ViolenceAgainstDalits
11 Jan 2023 குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டை சாதி வெறியர்களை கைது செய்யாதது ஏன்? ஹென்றி திபேன் கேள்வி People's Watch in Media Madurai

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் உயர்நிலையில் குடிநீர் தேக்க தொட்டியில் மலத்தை கலந்து சாதி வெறி கொடுமையைச் செய்த குற்றவாளிகளை 15 நாட்களாகியும் கைது செய்யதது ஏன் என்று மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் கேள்வி எழுப்பி உள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரிடம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதாகவும், இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் புகாரளித்தனர். இது தொடர்பாக சாமியாடிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஹென்றி திபேன் கோரிக்கை இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரி திபேன் அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. .........................................

#Pudukottai, #Eraiyur, #Vengaivayal, #SC/ST, #CasteDiscrimination, #ViolenceAgainstDalits
4 Jan 2023 'சிறைகளில் கைதிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துங்கள்' -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு People's Watch in Media Madurai

கைதிகளின் அடிப்படை வசதிகளை சிறைகளில் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி சிறைத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் அடிப்படை வசதிகள் மதுரை மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபென், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவும், சிறைகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது அரசு வக்கீல்கள் எஸ்.பி.மகாராஜன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, பெரும்பாலான சிறைகளில் விதிகளின்படி உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அலுவல்சாரா பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர். .............................................  

#DailyThanthi, #HighCourt, #MaduraiBench, #MaduraiBenchoftheMadrasHighCourt, ##HighCourtOrder, #Jail, #Prison, #NonOfficialVisitors


Join us for our cause