for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: தகுதி அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பான வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ-யின் விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

.....................

Full Media Report



Join us for our cause