for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

18 Apr 2023 பல் பிடுங்கிய விவகாரம் விசாரணை அதிகாரி அமுதா முன்பு மேலும் 3 பேர் நேரில் ஆஜர் People's Watch in Media Tirunelveli

மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதாவை நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர்கள் அம்பை காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங் #காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
17 Apr 2023 பல் பிடுங்கிய விவகாரத்தில் கலெக்டர் தனது கடமையை செய்யத் தவறிவிட்டார்: ஹென்றி திபேன் பரபரப்பு குற்றச்சாட்டு People's Watch in Media Ambasamudram

அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து இரண்டாம் கட்டமாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.17) விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "அம்பாசமுத்திரம் பகுதியில் வன்கொடுமை என்பது நடைபெற்று உள்ளது. விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் in சென்று பற்களை பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அப்போதே மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் 4 நிலையத்திற்கு நேரடியாக சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பறிமுதல் செய்து இருக்க வேண்டும். அப்படி பறிமுதல் செய்திருந்தால் இந்த விசாரணையே தற்போது தேவையில்லை. உச்ச நீதிமன்றத்தில் காவல் நிலையத்தில் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள் எதுவுமே அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மூன்று கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் காவல் இ நிலையத்தின் உள்ளேயும் வெளியேவும் அனைத்து பகுதிகளிலுமே கண்காணிப்பு கேமராவினைப் பொறுத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெல்லை ஸ்ரீ மாவட்டத்தில் 213 கேமராக்கள் தான் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் கொடுத்துள்ளார்கள். அம்பாசமுத்திரத்தில் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கையாகும்" என அவர் தெரிவித்தார்.

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங் #காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
17 Apr 2023 விசாரணைக் கைதிகளை சித்ரவதை செய்த விவகாரம்... முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு..! People's Watch in Media Tirunelveli

பல்வீர் சிங்கை விரைந்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பல்வீர் சிங்கின் கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக நிலைக்கும் என கூறினார்.

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங் #காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்

Join us for our cause