போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்.. அதிர்ந்த நீதிபதி; நீதிமன்றத்தை பரபரப்பாக்கிய அஜித்குமார் மரண வழக்கு! - AJITH KUMAR CASE
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது நீதிமன்றத்தையே பரபரப்பாக்கியது.
...................................................
விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால், சிறப்பு குழு மூலம் கொலை செய்யப்பட்ட அஜித் குமார் சார்பில் பல அமைப்புகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு மனு தாக்கல் செய்தோம்.
தற்போது நான் அனைவர் சார்பாக பேசுகின்றேன். நீதியரசர் 27 ஆம் தேதி நடந்த சம்பவம், அந்த அம்மையாருடைய நகை காணாமல் போனது, அவர் அஜித்தை சந்தேகப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார், அந்த புகாருக்கு 27ம் தேதி ரசீது மட்டும் கொடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
............................................................................
