People's Watch in Media
"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. .................................................. நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ................................ முன்னதாக அஜித்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது. .........................
அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன? மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர். ....................................................... மனுதாரர் வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மாரீஸ்குமார் வாதிடும்போது, "சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததும் விதிமீறல்தான். அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலாளர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் ஒரு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுப்பதாகவும், சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றனர். .....................................................................
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை... பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி... காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்... திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் சிறப்பு வனத்தில் பணி செய்கின்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம் தற்போது நான் அனைவரின் சார்பாக பேசுகின்றேன் அனைத்து வாதாடிய வழக்கறினார்கள் சார்பில் நான் பேசுகின்றேன். .....................................................
