People's Watch in Media
அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகன் மர்மச் சாவு? போலீ சாருக்கு ஆதரவாக தந்தையை மிரட்டிய 4 பேரை ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு
காவல் நிலையத்தில் இறந்தவரின் தந்தையை மிரட்டியது தொடர்பாக அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர் உட்பட 4 பேர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 4 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. ............................................ பின் மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இது தொடர்பாக உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு (நீதித்துறை) ஒரு கடிதம் வந்தது. அதில், 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். வழக்கு விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பதிவாளர், ''சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார். இதை ஏற்கனவே தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் அமர்வு அரசுத் தரப்பில் பதில் மனு செய்ய உத்தர விட்டது.மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்துப் பார்த்தபின் நீதிபதிகள் உத்தரவு: இவ்விவகாரம் தொடர்பாக கதிர், ஆதிநாராயணன், ரமேஷ், லோகநாதனை ஏப்.,17ல் ஆஜர்படுத்த மதுரை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மகன் மர்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு 4 பேரை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் தந்தையை மிரட்டியோரை கைது செய்ய உத்தரவு
The Madurai Bench of the Madras High Court directed the Commissioner of Police, Madurai, to secure and produce before the court four men alleged to be behind the withdrawal of a petition pertaining to the Avaniapuram custodial death case....
MADURAI: The Madurai Bench of Madras High Court on Thursday directed the Madurai Commissioner of Police to secure and produce four persons, who were alleged to be behind the suspicious withdrawal of a custodial death case, before the court....
முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று ஆதாரத்துடன் விளக்கினார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி, போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
He went missing on February 15 after a press meet After being apprised of the progress made by the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) in tracing the whereabouts of environmental activist T. Mugilan alias Shanmugam who went missing...
