கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Dots Media சேனலுக்கு அளித்த பேட்டி
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Dots Media சேனலுக்கு அளித்த பேட்டி
....................................
இதில் காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை; மேலதிகாரிகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இந்த மரணத்தைப் பொறுத்தவரை, பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், இறந்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.
ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.