காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தல்
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக அவரது சகோதரர் கூறுகிறார்.
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்.
சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேசின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது சகோதரர் வினோத் உடற்கூராய்வுக்குப் பிறகும் கூட விக்னேசின் உடலைப் பார்க்க குடும்பத்தினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன.