for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தல்

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை கெல்லிஸ் சந்திப்பில் கடந்த 18-ம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரித்து பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ் (25) கடந்த 19-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷின் குடும்பத்தினர் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு நடந்த சம்பவம் குறித்து விளக்கினர். அப்போது, விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத் கூறுகையில், தனது தம்பியின் மரணத்தை மறைக்க ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ், பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் தன்னையும், தனது தம்பிகளையும் காரில் அழைத்துச் சென்று பணம் கொடுத்து பேரம் பேசியதாகவும், மெரினாவில் கடை

வாங்கித் தருவதாகவும் கூறியதாக தெரிவித்த அவர், காவல் துறையினர் கொடுத்த பணத்தை செய்தியாளர்கள் முன் காண்பித்தார்.
Full Media Report



Join us for our cause