Media
People’s Watch condemns the engineered moves, presumably by nongovernment organisations, objecting to the proposed marriage of Ms. Irom Sharmila, the Iron Lady of Manipur with Mr. Desmond Coutinho before the Marriage Registrar, Kodaikanal.
மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவிற்கும் பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த கௌட்டின்ஹோவிற்கும் முறைப்படி திருமணம் கொடைக்கானலில் நடைபெற்ற உள்ளது. அரசு சாரா அமைப்புகள் என்று கூறும் சிலர் இதைத் தடுக்க திட்டமிட்டு இடையூறு செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது
அய்.நாவில் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா இம்மனுவை நிலுவையில் வைத்திருப்பது இதனால் ஏற்படும் ஆக்கப்பூர்வ விளைவுகளைத் தடுப்பதாகும்.இன்றைய நிகழ்வை இங்கிலாந்து, பிரான்ஸ், உருகுவே ஆகிய மூன்று நாடுகளுடன் மனித உரிமைக்கான அகில இந்திய பணிக்குழு, அகில உலக பொது மன்னிப்பு சபை, விடுதலை இப்போது டீஆஊகூ, & குஐனுழ, ஊஐஏஐஊருளு, ஊடிnநேஉவயள, துக்ஷஐ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
This is to bring to your attention that the Executive Director of People's Watch, Mr. Henri Tiphagne, will be addressing an event at the United Nations Headquarters in New York today. Mr. Tiphagne will be representing the International Dalit...
உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் இந்தியா மீது பிற நாடுகள் முன் வைத்த 250 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட இந்தியா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் அய்.நா.வின் 36வது கூட்டத் தொடரில் இவை எல்லாவற்றுக்கும் இந்தியா பதில் அளிக்கும் என்று எதிபார்க்கபடுகிறது

தர்மபுரி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால், 20 தமிழக கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், 20 தமிழர்கள் படுகொலை வழக்கில் தமிழக அரசு தலையிட கோரியும், தர்மபுரி மாவட்ட மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் கூட்டம் நாளை (7ம் தேதி) மாலை 6 மணிக்கு தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் நடக்கிறது. இதில், விசி தலைவர் திருமாவளவன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினர் செந்தில்ராஜா தலைமையில் நேற்று நடந்தது. விசி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, நிர்வாகிகள் வசந்த் ராமதுரை மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வழக்கில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலமும், ஆரம்ப நிவாரணத்தொகை ₹5 லட்சமும், ஆந்திரா அரசிடம் பெற்றுத்தர வேண்டும். தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், வாழ்வாதாரத்திற்காக அருகாமை மாநிலங்களுக்கு புலம்பெயர்வதை தடுக்க வேண்டும். நிரந்தர வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு காவல்துறை தலைவர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் இணைந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்ட வழக்கினை ரத்து செய்து, மனித உரிமை மீறலில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கிறது.
People’s Watch, the All India Network of Individuals and NGOs working with National and State Human Rights Institutions [AiNNI], Human Rights Defenders Alert –India [HRDA] and the Institution of Human Rights Education [IHRE] welcomes the appointment of Ms. M.P....
ஓராண்டிற்கு மேலாக வெற்றிடமாக இருந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு திருமிகு. நிர்மலா, இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் நியமனம் செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம், தேசிய மற்றும் மாநில மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் அரசு சாரா அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பு, (AiNNI) மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பு, (HRDA) மற்றும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் (IHRE) ஆகிய அமைப்புகள் இணைந்து வரவேற்கிறோம்.
ஜல்லிக்கட்டு தடைநீக்க போராட்டத்தின்போது, போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை குறித்து விசாரிப்பதற்காக மாண்புமிகு நீதியரசர் இராஜேஸ்வரன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மக்கள் கண்காணிப்பகம் தலையீடு செய்து, (உயர்மட்ட கள ஆய்வுக்குழு) முனைவர். வே. வசந்திதேவி (முன்னாள் துணைவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுதாராமலிங்கம், அஜிதா, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர். இரவீந்திரன், டாக்டர். மணிவண்ணன், எழுத்தாளர் தியாகு மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் கிளாஸ்டன் சேவியர் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.