ஜல்லிக்கட்டு தடைநீக்க போராட்டத்தின்போது, போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை குறித்து விசாரிப்பதற்காக மாண்புமிகு நீதியரசர் இராஜேஸ்வரன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மக்கள் கண்காணிப்பகம் தலையீடு செய்து, (உயர்மட்ட கள ஆய்வுக்குழு) முனைவர். வே. வசந்திதேவி (முன்னாள் துணைவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுதாராமலிங்கம், அஜிதா, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர். இரவீந்திரன், டாக்டர். மணிவண்ணன், எழுத்தாளர் தியாகு மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் கிளாஸ்டன் சேவியர் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.