People's Watch in Media
After Singh was placed under suspension, the victims and human rights activists from People’s Watch in Madurai have been demanding an FIR against him. As the second round of inquiry commenced on Monday, the Tirunelveli DCB filed a...
After Singh was placed under suspension, the victims and human rights activists from People’s Watch in Madurai have been demanding an FIR against him. As the second round of inquiry commenced on Monday, the Tirunelveli DCB filed a case...
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவருமான ஹென்றி திபேன் அவர்கள் பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களை நோக்கி வைக்கிறார். @MadrasReview
அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களிடம் வார்த்தையில் கூற முடியாத அளவுக்கு கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்தி வெளியானதும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அதோடு, சார்ஆட்சியர் விசாரணை நடத்தியதும் ஏற்புடையதல்ல. காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் செயல்படுவதை ஆட்சியர் கண்காணிப்பது அவசியமானது. அதிலும் திருநெல்வேலி ஆட்சியர் கவனம் செலுத்தவில்லை. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகே, ஏஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை ஐஜி அந்தஸ்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு முறையாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்நிலை சிகிச்சை வழங்க வேண்டும் என்றார்.
அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை, பல்வீர்சிங் மீதான் வழக்குப் பதிவு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் @RedPixNews24x7 Youtube சேனலுக்கு அளித்த பேட்டி
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹென்றி திபேன், "இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அம்பாசமுத்திரம் காவல் 4 நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன்" என்று கூறினார். இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.18) அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வு செய்தார். காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை. கழிவறை என அனைத்து இடத்திலும் ஆய்வு செய்தார். வழக்கறிஞரின் இந்த திடீர் ஆய்வால் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த விசாரணையில் நேற்று ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட 13 பேர் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பக இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஹென்றி தீபன் விசாரணையில் பங்கேற்றார். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த ஹென்றி தீபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையைத் தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் முறையாகப் பொருத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். குறிப்பாக பல் புடுங்கிய சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் 3 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாகத் தகவல் அறிய உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி தீபன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வுக்குச் சென்றார். அப்போது அவர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை, கழிவறை என ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்தார்.
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பு வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.