மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம்
அப்போது, கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது என்று சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது
தீர்ப்பு ஒத்திவைப்பு
சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது என்று மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.