for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

25 Jul 2025 அஜித் குமார் லாக்கப் மரணத்துடன் தமிழக காவல்துறையில் 31 லாக்கப் டெத்! மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் பேட்டி People's Watch in Media Madurai

அஜித் குமார் லாக்கப் மரணத்துடன் தமிழக காவல்துறையில் 31 லாக்கப் டெத்! மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் பேட்டி சித்திரவதை என்றால் மிருகவதைப் போல மனித உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது..." உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை! .............................................................

##Kannottam, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
25 Jul 2025 `முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் ``தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” - ஹென்றி திபேன் .........................................................................   ``காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறதே. அதனால் அரசுக்கும் கெட்டப் பெயர் உண்டாகிக் கொண்டிருக்கிறதே. ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளராக இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?” ``இது இப்போதுள்ள பிரச்னை இல்லை. எல்லா ஆட்சியிலும் இந்த பிரச்னைகள் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நாம் இந்த ஆட்சி குறித்து பேச வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. 2021 இல் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம் போன்றவற்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டிருந்தார்கள். அதனால் இவர்களின் ஆட்சி கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமென நம்பினோம். ................................................................

##Vikatan, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
25 Jul 2025 பல்வீர் சிங் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்! People's Watch in Media Madurai

பல்வீர் சிங் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்!   ``தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லைலையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி .எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட் டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .” - ஹென்றி திபேன் ....................................................................................

##Vikatan, ##TNCM, ##MKStalin, ##TNGovernment, ##BalVeerSingh, ##ajithkumar, ##dspsundaresan, ##TNPolice, ##ADGP, ##DavidsonAasirvatham, ##TNMedia, ##HinriTiphagne
21 Jul 2025 பல் பிடுங்கிய பல்வீர்சிங்..டெல்லியில் ராஜமரியாதை! அமுதா ஐஏஎஸ் மீது வழக்கு! பரபர புகார் சொல்லும் ம.க. People's Watch in Media Madurai

பல் பிடுங்கிய பல்வீர்சிங்..டெல்லியில் ராஜமரியாதை! அமுதா ஐஏஎஸ் மீது வழக்கு! பரபர புகார் சொல்லும் ம.க. மதுரை: காவல் சித்திரவதை தொடர்பான பல்வீர்சிங் ஐபிஎஸ் வழக்கை விசாரித்த பின்னரும் கூட, வழக்கு குறித்த அறிக்கையை இதுவரை வழங்காத அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. .......................................................................... இந்த நிலையில், மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் (JM No:1) முன் நிலுவையில் உள்ள நான்கு காவல் சித்திரவதை வழக்குகளில் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் அவருடைய குழுவில் உள்ள 13 பேர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் காவலர்கள் (Constables) கொலையாளிகளாக உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ........................................

##TamilOneIndia, ##ToI, ##AmuthIAS, ##BalVeerSingh, ##HenriTiphagne


Join us for our cause