for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

9 Aug 2023 தமிழ்நாடு காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா? சென்னை, ஈரோட்டில் நடந்தது என்ன? People's Watch in Media

"சரியான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்" அடுத்தடுத்து நடந்த இந்த இரு நிகழ்வுகளும், காவல்துறையின் மனப்போக்கை வெளிப்ப டுத்துவதாக பலரும் குற்றம்சாட்ட ஆரம்பித் தனர். "திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். அதில்தான் இப்படி நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும்கட்சி தான். யாருக்கும் கீழே இருப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் இது நடக் கிறது. எல்லா விஷயங்களையும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது," என்கிறார் மக்கள் கண்காணிப்பக த்தின் ஹென்றி திபேன்.

##TNPolice, ##HenriTiphagne, ##HenryTiphagne, ##PeoplesWatch, ##மக்கள்கண்காணிப்பகம், ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##தமிழ்நாடுகாவல்துறை
2 Aug 2023 Is encounter silver bullet against crime? People's Watch in Media

Henri Tiphagne, advocate and executive director of a human rights organization, People’s Watch, said it is wrong to celebrate encounter killings. “Most of the encounter killings are staged ones even though police claim they only acted in retaliation. They...

##HenriTiphagne, ##PeoplesWatch, ##மக்கள்கண்காணிப்பகம், ##HenryTiphagne, ##HPT, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், #Encounter, #TNEncounter, ##என்கவுன்ட்டர், ##மோதல்சாவு, ##மோதல்சாவுகள்
1 Aug 2023 மணிப்பூர் வன்முறை: கண்டுகொள்ளாத ஆணையங்களைக் கலைக்க வலியுறுத்தல் People's Watch in Media

மணிப்பூர் வன்முறையைக் கண்டுகொள்ளாமலிருந்த மகளிர், குழந்தைகள் நலம், சிறுபான்மை ஆணையங்களைக் கலைக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது. இதுகுறித்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்டோர் மீது கடும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், நாட்டில் உள்ள அத்தனை ஆணையங்களும் இந்த வன்முறையைக் கண்டுகொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது வேதனையை வெளிப்படுத்திய பின்புதான், தேசிய மனித உரிமை ஆணையம் தாமதமாக நடவடிக்கையைத் தொடங்கியது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த, மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்ட எந்த ஆணையமும் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அதற்கான உறுப்பினர் தேர்வும் வெளிப்படையாக நடைபெறவில்லை என்ற புகார்கள் இருப்பதால் 2016-ஆம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணைய நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு அங்கீகாரம் தரவில்லை. தற்போது, 2023-ஆம் ஆண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையங்களின் கூட்டமைப்பு அங்கீகாரம் தரவில்லை. எனவே, தேசிய மனித உரிமை ஆணையம் சர்வதேச அங்கீகாரம் பெறாத ஆணையமாக உள்ளது. அதிகபட்ச குறைகளுடன் ஆணையங்கள் உள்ள நிலையில், மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவத்தில் ஆணையங்கள் செயல்படாமல் போனது கண்டிக்கத்தக்கது.

##HenriTiphagne, ##PeoplesWatch, ##மக்கள்கண்காணிப்பகம், ##HenryTiphagne, ##HPT, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##Manipur, ##ManipurViolence, ##NHRC, ##NCPCR, ##NCW, ##NCM, ##NCSC, ##NHRIs, ##மனிதஉரிமைநிறுவனங்கள், ##HumanRights, ##HumanRightsInstitutions


Join us for our cause