for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

1 Nov 2022 கல்லுமண்டையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்! 12 ஆண்டுகள் போராடிய குருவம்மாள்! மனித உரிமை ஆணையம் அதிரடி People's Watch in Media Madurai

கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள். இது தொடர்பாக விவரம் வருமாறு; கல்லுமண்டையன் கவியரசு, முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இராமநாதபுரம் சாலை செக்போஸ்ட் அருகே, அப்போதைய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளதுரையால் கடந்த 16.02.2010 ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாள் மனித உரிமை செயற்பாட்டக அமைப்பான, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேனிடம் இது குறித்து முறையிட்டு சட்ட உதவி கோரினார். 12 ஆண்டுகளாக இதனிடையே கடந்த 14.02.2010 அன்று நள்ளிரவில் வீடு புகுந்த சீருடை அணியாத 6 காவலர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டு சித்ரவதை செய்ததோடு, வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்திருந்தார். மேலும், மக்கள் காணிகாணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர்கள் அளித்த சட்ட உதவிகளை கொண்டு 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என மகனின் என்கவுண்டருக்கு நீதி கேட்டு நடந்தார் குருவம்மாள்.

#என்கவுன்ட்டர், #ஹென்றிதிபேன், #ஹென்றிடிபேன், #வழக்கறிஞர் சின்னராசா, #மக்கள்கண்காணிப்பகம்வழக்கரிஞர்கள், #மோதல்சாவு, #EncounterDeath, #TamilNaduPolice, #People'sWatch
31 Oct 2022 Press Meet - SHRC Order - Madurai Kallumandaiyan Encounter - 12 ஆண்டு - வெள்ளத்துரை உள்ளிட்ட காவலர்களுக்கு... People's Watch in Media Madurai

31.10.2022 மக்கள் கண்காணிப்பகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு - கவியரசு மற்றும் கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகியோர் கடந்த 16.02.2010 அன்று அப்போதைய காவல் உதவி ஆணையாளர் திரு.வெள்ளதுரையால் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வழக்கில் ஆணையம் வழங்கியுள்ள 21.10.2022 தேதியிட்ட தீர்ப்பு தொடர்பாக.... தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திருமதி.குருவம்மாள் ஆஜராகி இவ்வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் திரு.சின்னராசா அவர்கள் தலைமையிலான வழக்கறிஞர்கள் திரு.க.சு.பாண்டியராஜன், திரு.சதீஷ் ராஜ்குமார், திரு.நாகேந்திரன், திரு. முத்துகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு மக்கள் கண்காணிப்பகம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இதுவரை திரு.வெள்ளத்துரை அவர்கள் செய்த என்கவுண்டர் கொலைகள் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

#SHRC, #Velladurai, #EncounterDeath, #Kallaumandayan, ##ExtraJudicialKilling, #Madurai, #Intervention, #LegalIntervention, #TNSHRC
31 Oct 2022 இரு நாள் அரசியல் பயிலரங்கம்! முன்னுதாரணங்களை ஏற்படுத்திய மஜக! People's Watch in Media Chennai

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை அருகே கோவளத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கடந்த அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயலாளர் ஆசிர்வாதம் மனித உரிமைகள் குறித்து எடுத்த வகுப்பில், அரச வன்முறைகள், எண்கவுண்டர், மனித உரிமை மீறல்களை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து குறிப்புகளை கொடுத்திருக்கிறார்.    

#IAseer, #Aseervatham, #ManithaneyaJananayagaKatchi


Join us for our cause