for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

16 Jan 2023 Madras HC Orders State To Pay ₹3.5 Lakh Compensation To Murder Accused Who Was Illegally Detained In Prison After Acquittal People's Watch in Media

The Madras High Court has directed the State to pay Rs. 3.5 Lakh compensation to a man who was illegally detained in prison for 9 months after the Court had ordered his acquittal. The bench of Justice Sunder Mohan...

#HenriTiphagne, #HenryTiphagne, #HCMadurai, #Compensation
14 Jan 2023 பத்திரிகைச் செய்தி - செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிமக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது Press Releases Madurai

செங்கல்பட்டு அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது. மேலும் கொலையை மறைக்க முயன்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருடன் கூட்டாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.   செங்கல்பட்டு மாவட்டம்,...

#ObservationHome, #Juvenile, #Torture, #Murder, #CustodialTorture, #ChildRights, #ViolenceAgainstChildren
12 Jan 2023 Initiate probe into death of 17-year-old at juvenile home: Evidence People's Watch in Media Madurai

MADURAI: People's Watch Executive Director Henri Tiphagne has urged Chengalpattu District Collector AR Rahul Nadh to inspect the juvenile home and inquire into the death of a 17-year-old boy. Railway police spotted the boy at Tambaram junction on December 29...

#Gokulsri, #ObservationHome, #TNIE, #TheNewIndianExpress, #Torture, #ChildRights, #ViolenceAgainstWomen, #CustodialDeath, #JuvenileJustice, #Juvenile, #CorrectionalHome
12 Jan 2023 செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ படுகொலை மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு People's Watch in Media

செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல்ஸ்ரீ என்ற  சிறுவன்  சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக  மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை அந்த சிறுவனை கைதுசெய்த ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிறுவனை காவல்துறை யினர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் அந்த சிறுவனை தாயார் சந்தித்துப்பேசிய நல்ல உடல்நிலையோடு இருந்தான். இந்நிலையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோகுல்ஸ்ரீ படு கொலை செய்யப்பட்டுள்ளான். இதற்கு சான்றாக உடலின் பல இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு இந்த வழக்கை அரசு  மாற்றியுள்ளது. இந்த சிறுவன் மட்டுமல்ல அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. அந்த இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறுவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.   சாட்சிகளை மிரட்டிவரும் செங்கல்  பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  மாவட்ட ஆட்சியர்  தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது உடன்  சித்திரவதைக்குள்ளான 4 சிறார்களின் காயத்தையும் மருத்துவக்கு குழுவுடன் ஆய்வு செய்யவேண்டும்.  அதிகாரி சிவக்குமாரின் மிரட்டலுக்கு உள்ளான  சிறுவனின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #ObservationHome, #ChengalpatObservationHome, #செங்கல்பட்டுசிறார்இல்லம்


Join us for our cause