for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

12 Dec 2023 அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் செவ்வா யன்று (டிச. 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், மனுதாரர் ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக  சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை,  மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் (சிபிஎம் தொடர்ந்த வழக்கில்) நிராகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாலும், அவர்களுக்கு எதிராக குற்றம் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.  மேலும், முறையாக விசாரணை நடத்தாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ  மீண்டும் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த  உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
29 Nov 2023 மாணவிக்கு மதரீதியிலான துன்புறுத்தல்: ஆசிரியர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை People's Watch in Media

கோவை, துடியலூரில் அரசுப் பள்ளி மாணவிக்கு மதரீதியில் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியின் பயிற்சி ஆசிரியை ஒருவர் மதரீதியிலான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பு ஆசிரியரும் அந்த மாணவியை இழிவுபடுத்தி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியர் ஆகியோர் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடமும் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதும், குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுக்கப்படுவதும் நமது சமூகத்துக்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகளின் உரிமையை மீறுவதாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக் கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை தமிழக அரசு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், குழந்தைகள் நல அலுவலரின் செயல்பாடுகள் குறித்து அரசு அறிக்கை கேட்பதுடன், சம்பந்தப்பட்ட சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #SHRC, #TNGovt, #SchoolDiscrimination, #MinorityDiscrimination, #ThudiyalurGovtSchool, #MadrasHighCourt, #மனிதஉரிமைகள்ஆணையம், #சென்னைஉயர்நீதிமன்றம், #பாகுபாடு, #பள்ளிமாணவிபாகுபாடு
28 Nov 2023 SHRC urged to take suo moto cognizance of handcuffing of Pocso case victim People's Watch in Media

People’s Watch, a Madurai-based human rights organisation has sought the intervention of State Human Rights Commission to take suo moto cognizance of the inhumane police action of handcuffing a Pocso case victim in The Nilgiris district earlier this month....

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #POCSO, #POCSOAct, #HandCuff, #OotyPolice
28 Nov 2023 கோவை, துடியலூர், அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது வெறுப்புணர்வோடு நடந்து தாக்குதல் நடத்திய பயிற்சி ஆசிரியையை விசாரணைக்கு உட்படுத்துக. பயிற்சி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர Press Releases

கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

#media


Join us for our cause