Media
“The instant transfer would quell any such efforts to strengthen the judiciary in the State... We request that the collegium may reconsider, in public interest, its decision,” the representation, signed by over 200 lawyers, said Over 200 lawyers...
இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக தமிழக அரசு சார்பில் நினைவு சதுக்கம் அமைக்க வேண்டும்.பாம்பன் தீவுக்கவி அருளானந்தம் நினைவுக்கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் வலியுறுத்தல். நெய்தல் நிலத்தின் பெருந்தலைவரும், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு நட்புறவு பாலமாக விளங்கிய தீவுக்கவி யு.அருளானந்தம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இராமேஸ்வரம் – பாம்பன் பெரியநாயகி மகாலில் நவம்பர் 5 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மீனவர் சங்க தலைவர்கள், மக்கள் இயக்க தலைவர்கள் பங்கு கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர். “நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் நீவுக்கவி யு.அருளானந்தம் “என்ற நூலும், “நெய்தல் நதி தீவுக்கவி யு.அருளானந்தம்’ என்ற நூலும் இக்கூட்டத்தில் அவரது நினைவாக வெளியிடப்பட்டது. நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் தீவுக்கவி யு.அருளானந்தம் என்ற நூலை தேசிய மீனவர் பேரவைத் தலைவர் திரு.இளங்கோ, அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் திரு.ஆன்றன் கோமஸ், மக்கள் கண்காணிப்பகம் தலைவர்.வழக்கறிஞர்.கென்றி திபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட நூலை மறைந்த அருளானந்தம் அவர்களின் சகோதரர் யு.இருதையம் அவர்கள் பெற்றுக் கொண்டார். மீனவர் உரிமைக்கூட்டமைப்பு, பாம்பன் பரவர் நலப் பேரவை, சமம் குடிமக்கள் இயக்கம் மற்றும் அனைத்து மீனவர் சங்கங்கள் இணைந்து நடத்திய புகழ் அஞ்சலி கூடுகையை மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் சமம்.சி.சே.ராஜன் அவர்கள் ஒருங்கிணைத்தார். ஒருங்கிணைப்புக் குழுவில் பாம்பன்.கேவிஸ்டன், ஜே.அருளானந்தம், கனிஷ்டன், முடியப்பன், லிடிஸ், ரோவன் தல்மேதா போன்றோர் செயல்பட்டனர். மறைந்த அருளானந்தம் அவர்களின் உருவப்படத்திற்கு பாம்பன் பரவர்நலப்பேரவை தலைவர் திரு.எஸ்.ஏ. பவுல் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து மீனவர் சங்க தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத்தலைவர் சேசுராஜ், எஸ்.பி.ராயப்பன்,பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், மூக்கையூர் ஜான், இருதைய மேரி, ராக்கினி, மகத்துவம், சைமன், ஜெரோம், வழக்கறிஞர் ஜான்சன், மற்றும் எழுத்தாளர். குறும்பனை பெர்லின், பேரா.அந்தோனி ராஜ், அருட்தந்தை சர்சில், அருட்தந்தை பிரிட்டோ, ஹென்றிடிபேன், ஆண்டன் கோமஸ், இளங்கோ என பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். நவம்பர் 21 அகில உலக மீனவர் தினத்தனற்று தமிழகம் முழுவதும் தீவுக்கவி அவர்களை நினைவுக்கூறுவது என்றும்; மறைந்த தீவுக்கவி. அருளானந்தம் அவர்கள் எழுதி வெளி வராமல் இருக்கும் மீனவர் வரலாறு குறித்த நூலை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை கொண்டு வெளியிடுவது என்றும்; திரு.அருளானந்தம் அவர்கள் பெயரில் பாம்பனில் நூலகம் துவங்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும்,மீனவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்துவது என்றும்; இலங்கை கடற்படையால் உயிரிழந்த அனைத்து மீனவர்களின் நினைவாக நினைவுசதுக்கம் தங்கச்சி மடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது மீனவர் உரிமைக்கூட்டமைப்பு சார்பில் ரோவன் தலாமேதா நன்றிக் கூறினார்.
இலங்கை கடற்படையினர் தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மனு அளித்தார் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின சேர்ந்த இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில கடலில் விழுந்து மூழ்கி இறந்த மீனவர் ராஜ்கிரன் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுததிஅவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் மற்ற இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர் இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் இறந்த மீனவர் ராஜ்கிரன் உடல் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டது அதற்கு முன்னதாக இலங்கையில் அவரது உடல் பிரத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் இலங்கை கடற்படையினர் தமிழக கடற்படையிடம் அவரது உடலை ஒப்படைத்தனர். கோட்டைப்பட்டினத்துக்கு, ராஜ்கிரண் உடல் வந்தவுடன், அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இறந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது.அதன் பின்னர் இறந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம் செய்யப்பட்டது, இந்நிலையில் ராஜ்கிரன் மனைவி பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அடக்கம் செய்யும்போது கணவர் உடலை தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், மீண்டும் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் குழு முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து இலங்கை கடற்படையினரை குற்றவாளியாக சேர்த்து கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கண்காணிப்பகம்- இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் கண்ணகி, முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பொது உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வக்கீல் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பேராசிரியர் கல்விமணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய ரமேஷ்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பூங்குழலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் நிறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவல் தலித் மக்களை மற்ற சமூகத்தினருக்கு எதிரானவர்களாக காட்டி அரசியல் ஆதாயம் பெற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. தமிழக கிராமங்களில் சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவியுள்ளனர். கோவில்களுக்கு நன்கொடை கொடுப்பது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்வதுபோல் ஊடுருவி செயல்பட்டு வருகிறார்கள். பாம்பின் வாயில் தவளை சிக்கியிருப்பதைப்போல பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் நடக்கவில்லை, சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என சட்டமன்றத்தில் கூறியவர்தான் அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் சாதியின் பெயரால் மாணவர்கள், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளைய தலைமுறையினர் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்துள்ளது. திருமாவளவனை வீழ்த்தினால் தலித் மக்களை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திருமாவளவனை வீழ்த்த முடியாது. தம்பி எனக்கூறி கையை பிடித்தபோது நம்பி கையை கொடுத்தேன், ஆனால் அதற்கு பின்னால் அவ்வளவு பெரிய படுகுழி இருக்கும் என நினைக்கவில்லை. சாதிய ஆணவப்படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியிருந்தது. இந்த நிலையில், 'சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலையைத் தடுப்பதற்கு என ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும். ................................... மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து அந்தத் தேக்கத்தை உடைத்துப் பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில்தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த ஆணவக்கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதைத் தடுக்க வேண்டும். அவர்களைப் படுகொலை செய்ய வேண்டும். தருமபுரியை எரித்ததுபோல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதிமீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் எனப் பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுகளைப் பிரித்துக்கொள்ள முடியும்.
விழுப்புரம், அக். 31- ஆணவ கொலையை தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு திருமாவளவன் வேண்டுகோள்விடுத் தார். ‘கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கின் தீப்பை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவப் படுகொலைக்கு எதி ரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி யும் மக்கள் கண்காணிப்பகம், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. மக்கள் கண்காணிப்ப கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார். உயர் நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பா.மோகன் ஆகியோர் இணைய வழியாக கருத்துரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், “கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை நடைபெற்ற 18 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு குறித்து பேச முடியாத நிலையே இருந்து வந்தது. இது குறித்து தற்போது விரிவாகப் பேச மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்பு ணர்வு மையமும் ஏற்பாடு செய்துள்ளது” என்றார். தேசிய அளவில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்த வர்களுக்கு எதிரான நிலையை பாஜக வும், சானாதன அமைப்புகளும் முன்னெ டுத்து வருகின்றன. தமிழகத்தில் அந்த நிலைப்பாட்டை மாற்றி, தலித்து களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்க ளுக்கும் எதிராக மற்றவர்களை ஒருங்கி ணைத்தல், தமிழகத்தில் தலித்து களுக்கு எதிராக மற்ற சாதியினரை ஒருங்கிணைத்தல் என்று திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது என்றும் திரு மாவளவன் கூறினார். துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்த னைச் செல்வன் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர அப்துல் சமது எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், சிபிஐ மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.வி.சரவணன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் ரமேஷ்நாதன், வழக்குரை ஞர் பூங்குழலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன், விசிக மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.
இந்தியாவில், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் எனத் திரைப்படத்துறைக்குள் போதைப்பொருள் புழங்கும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக்கூறி பாலிவுட் ...