for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

28 Mar 2023 யார் இந்த பல்வீர்சிங்? நள்ளிரவு 11.30 CCTV எங்கே? பேரலை சேனலுக்கு ஹென்றி திபேன் பேட்டி People's Watch in Media Madurai

நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குறித்து மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் பேரலை (Youtube) சேனலுக்கு 28.03.2023 அன்று அளித்த பேட்டி

#ASP, #BalVeerSingh, #CustodialTorture, #PoliceViolence, #Ambasamudram, #PoliceTorture, #HenriTiphagne, #PeralaiYouTube
27 Mar 2023 செங்கல்பட்டு அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் கொலை:அதிர்ச்சித் தகவல்கள் People's Watch in Media Chengalpattu

சாத்தான்குளம் காவல் சித்திரவதையை விட கொடுமையான 96 கொடூர காயங்களுடன் செங்கல்பட்டு அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 31.12.2022 அன்று 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் குறித்து, அவனது அம்மா பிரியா 27.03.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்..  

##Gokulsree, ##ObservationHome, ##Chengalpattu, ##CustodialTorture, ##ViolenceAgainstChildren
14 Mar 2023 மதுரை சரவணா ஸ்டோர்ஸ் வழக்கு.. அனுமதியின்றி இயங்குகிறதா ஃபுட் கோர்ட்? நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு! People's Watch in Media Madurai

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம் அப்போது, கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது என்று சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது தீர்ப்பு ஒத்திவைப்பு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது என்று மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.  

#SuperSaravana, #StoreSuperSravanaStores, #சூப்பர்சரவணாஸ்டோர்ஸ், #மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne
14 Mar 2023 மாட்டுத்தாவணி சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கு; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை! People's Watch in Media Madurai

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

#SuperSaravana, #StoreSuperSravanaStores, #சூப்பர்சரவணாஸ்டோர்ஸ், #மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne
14 Mar 2023 Former Principal of Tamil Nadu Theological Seminary Dhyanchand Carr remembered People's Watch in Media Madurai

The 86th birth anniversary of Rev. Dhaynchand Carr, former Principal of Tamil Nadu Theological Seminary, Madurai, was held here. Bishops of South India Rev. Chandrasekaran and Rev. Jayasingh Prince Prabakaran offered felicitations, extolling the many facets of Rev. Carr...

#DyanChandCarr, #DyanchandCarr, #Dyanchand Carr, #TTS, #Tamilnadu Theological Seminary, #Henri Tiphagne, #Henry Tiphagne, #People'sWatch, #People's Watch


Join us for our cause