People's Watch in Media

மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு

A major fire broke out on the ninth floor of Super Saravana Stores, a shopping mall on Melur Main Road, Uthangudi, in Madurai city on Wednesday evening. No loss of life was reported, but three employees complained of suffocation...

The store caught fire about two months after a petition was filed in the Madras High Court seeking temporary closure of the store. In the petition, Madurai-based activist Henri Tiphagne had highlighted that among other issues, the building lacked emergency...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர போலீசாரை விசிக நிர்வாகிகள் அவதூறாக பேசிய காணொளி சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசிக மாவட்ட செயலாளர் உட்பட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளியான விசிக மாவட்ட செயலாளர்தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் திடீர்திருப்பமாக மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் மற்றும் வழக்கறிஞர் பாப்பா மோகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிஉள்ளனர். ஆரணி அடுத்த வடுகாசத்து கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காவல் துறையினரை அவதூறாக பேசிய வழக்கின் கைது நடவடிக்கையின் பொழுது மனித உரிமை மீறல் நடைபெற்றதா..? காவல்துறையினர் கண்ணியமாக நடந்து கொண்டார்களா..? என விசாரணைமேற்கொண்டனர்.

‘‘கர்நாடக மாநிலத்தில், மனநலம் குன்றிய நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு, தாக்கியது மிகவும் கொடூரமானது. போலீஸார் அனைத்து நடைமுறை களிலும் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கின்றனர்.’’ – மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிபேன்...




"The transfer came 1 month and three days after the death of Gokul Sree. As a senior civil servant, it was the duty of Valarmathi to visit the juvenile center and call for immediate action. But she didn't visit...

மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிகக் கட்டடம் டிசம்பர் 5-ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டடம் திறக் கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அருகி லேயே தனியார் ஆம்னி பேருந்து நிலை யம் உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்படாததால், ஆட்டோக்கள் சாலை களில் நிறுத்தப்பட்டு, அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்துக் கால்வாய் சரவணா ஸ்டோர்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழை நீர் லேக் ஏரியா குடியிருப்பு பகுதிக்குள் புகு வதற்கு வாய்ப்புள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டு மானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதி கள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்ரி திபேன் சரவணா ஸ்டோர் பகுதியில் தற்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடை பெறும் என அறிவித்தனர்.