People's Watch in Media

மதுரை, மார்ச் 2- மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிகக் கட்டடம் டிசம்பர் 5-ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டடம் திறக் கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அருகி லேயே தனியார் ஆம்னி பேருந்து நிலை யம் உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்படாததால், ஆட்டோக்கள் சாலை களில் நிறுத்தப்பட்டு, அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்துக் கால்வாய் சரவணா ஸ்டோர்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழை நீர் லேக் ஏரியா குடியிருப்பு பகுதிக்குள் புகு வதற்கு வாய்ப்புள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டு மானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதி கள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்ரி திபேன் சரவணா ஸ்டோர் பகுதியில் தற்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடை பெறும் என அறிவித்தனர்.



செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் தாயார், தனது மகனின் இறப்பை மறைக்க அதிகாரிகள் தன்னை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு கடத்தி சென்று, தன்னிடம் சமரசம் பேசி வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனின் இறப்பு தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இதுவரை கைதாகியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரியாவின் சட்ட போராட்டத்திற்கு உதவ மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், பிரியாவை கூர்நோக்க இல்ல அதிகாரிகள் நடத்தியவிதம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிறார். ..........................................................................................................






The Madras High Court has directed the State to pay Rs. 3.5 Lakh compensation to a man who was illegally detained in prison for 9 months after the Court had ordered his acquittal. The bench of Justice Sunder Mohan...