Media
சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா அவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் அவர்கள் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம். சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும், ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள். ..................................................
ஜெய்பீம் படத்தை ஜாதிய ரீதியாக எதிர்ப்பதா? 100க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் சென்னை; நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை ஜாதிய ரீதியாக எதிர்த்து மிரட்டல் விடுக்கும் போக்குக்கு 100-க்கும் மேற்பட்ட சமூக செயற்பட்டாளர்கள் கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்உரிமைப் பேரவையின் கண....
சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம், பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர், பழனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கைது நடவடிக்கை நடந்துவருகிறது. இந்நிலையில் பழனியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் (POCSO act) கைதுசெய்யப்பட்டுள்ளார். இப்படி பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கு காரணம் என்ன என்று தேடத் தொடங்கினோம். இது குறித்து மக்கள் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனர் ஹென்றி டிபேன் தெரிவித்ததாவது, "பள்ளியில் வன்முறை, குடும்பத்தில் வன்முறை, தெருக்களில் வன்முறை இது புதிய அரசு வந்ததால் அதிகரித்துள்ளது என்று சொல்லவில்லை. பள்ளிகளில் உள்ள சிறார்களுக்கு ஆசிரியர்களால் வன்முறை என்பது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. தற்போது இது குறித்து வெளிவருவதற்கு வாய்ப்பு அளித்துள்ளது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வன்முறை எப்போதும் இருந்துவந்தது. தற்போது குழந்தைகளின் பெற்றோர்கள் இதனை வெளி உலகத்திற்கு கொண்டுவந்துள்ளனர். தேசிய குழந்தைகள் ஆணையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆய்வு நடத்தும்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கான வன்முறைகள் குறித்து கண்டறியப்பட்டன. ............................................
போதைப் பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது என சட்ட, ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், காவல் நிலையங்களில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ................................... மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் பேசுகையில், `சிறுவர்கள் சினிமாவில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து தடம்மாறுகிறார்கள். என்னிடம் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள். பட்டாக்கத்தி ஒன்றை அவன் வைத்திருந்தானாம். போதைக்கு அடிமையானவன். நான் அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசினேன். பள்ளி ஆசிரியர்களிடமும் பேசினேன். பிறகு, அந்த மாணவனிடம் பேசியபோது, `தவறான சகவாசத்தால் இப்படி ஆகிவிட்டேன். திருந்திவிடுகிறேன்’ என்று அழுதான். அவனைச் சட்டப்படி பார்த்தால், போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவன் பயங்கர கிரிமினலாக மாறிவிட வாய்ப்பு உண்டு. அதை யோசித்த நான் கவுன்சலிங் செய்து அனுப்பினேன். பள்ளித் தரப்பில் ஒரு வாரம் சஸ்பெண்ட் மட்டும் செய்தார்கள். வீட்டில் நல்ல அரவணைப்பையும் கண்காணிப்பையும் தரச் சொன்னேன். இப்போது அவன் மனம் திருந்தி நல்லபடியாக நடந்துவருகிறான். குற்றச் சம்பவங்களில் தெரியாமல் நுழையும் மாணவர்கள், இளைஞர்களைச் சட்டப்படி தண்டிக்காமல் கவுன்சலிங் செய்தால் நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். இந்த மாதிரிச் சிறுவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கும் ரௌடி கும்பல் வெளியே நடமாடுகிறது. அவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கிறது. அந்த மாதிரி ஆட்களை எந்த அரசியல் கட்சியும் வளர்த்துவிடக் கூடாது. நமது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும்'' என்றார். ................................................................................
He referred to a report submitted by an independent forensic expert who was present during the re-postmortem conducted on Rajkiran’s body last week. MADURAI: The Madurai Bench of Madras High Court on Friday suo motu impleaded the Ministry...
இலங்கை கடற்பகுதியில் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் உடலை உடைகள் அணிவிக்காமல் இந்தியாவுக்கு அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ராஜ்கிரண்மீனவர். சுகந்தன், சேவியர் ஆகியோருடன் அக்டோபர் 19-ல் விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டமீன்பிடித்ததாக கூறி தங்களது ரோந்து கப்பல் மூலம் விசைப்படகில் மோதியுள்ளனர். இதனால் விசைப்படகு கடலில் மூழ்கியது. என் கணவர் கடலில் மூழ்கி விட்டார். சுகந்தன், சேவியர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 நாட்களுக்கு பிறகு என் கணவரின் உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. கணவர் உடலில் காயங்கள் இருந்தன. அவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம். எனவே கணவர் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், மனுதாரரின் கணவரின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடல் தைக்கப்படாமல், உடைகள் அணிவிக்கப்படாமல் அப்படியே பெட்டியில் வைத்துத் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனி த உடலுக்கான மதிப்பை மீறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இலங்கையில் இருந்து உயிரிழந்த மீனவர்களின் உடல்களை அனுப்பும்போது அந்த உடலுக்கான உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை . இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்க்கிறது. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார
The Madurai Bench of the Madras High Court was on Friday informed that the body of the Pudukkottai fisherman who died at sea following a collision with a Sri Lankan naval vessel had no ante mortem injuries. Justice...
Madurai: The Madras high court was on Friday informed that no ante-mortem injuries were found on the body of the Pudukottai fisherman who died after a fall into the sea following a collision of his boat with a Sri...
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர் பலி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிருந்தா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் ராஜ்கிரண் உள்பட சிலர், மீன் பிடிக்க படகில் சென்றனர். கடந்த மாதம் 19-ந்தேதி நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், இவர்களின் படகின் மீது மோதியது. இதில் கடலுக்குள் விழுந்து மாயமான எனது கணவர் ராஜ்கிரண் 2 நாட்களுக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர். எனது கணவர் உடலை உறவினர்களிடம் காண்பிக்காமல் அடக்கம் செய்தது, அவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், எனது கணவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். அறிக்கை தாக்கல் இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கணவர் உடலை மறு பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கணவர் உடலை மறுபரிசோதனை நடத்திய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விதிகளை பின்பற்றவில்லை பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் உடல் மறு பரிசோதனை செய்ததில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது உடலை இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கும்போது சர்வதேச விதிகளை பின்பற்றி முறையாக ஒப்படைக்கவில்லை. அவரது உடல் மட்டுமல்லாமல், எப்போதும் இலங்கை தரப்பினர் இந்த விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது சர்வதே விதிகளை அவமதிப்பதாகும். குறிப்பாக ஒரு உடலை பரிசோதனை செய்தபின், மீண்டும் அந்த உடலை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு முறைகளை பின்பற்றித்தான் ஒப்படைப்பது வழக்கம். அந்த நடைமுறைகள் எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. எனவே அதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். எதிர்மனுதாரராக சேர்ப்பு இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ததில் காயங்கள் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. கோட்டைப்பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு: எனது கணவர் ராஜ்கிரண். இவர் அக்.,18 ல் சிலருடன் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மறு பிரேத பரிசோதனை செய்ய, விசாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பு: ராஜ்கிரண் உடலில் குண்டடிபட்டதற்கான காயங்கள் இல்லை. கடலில் மூழ்கி இறந்ததாக மறு பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பின் உடலை சரியாக தைக்காமல் இங்கு ஒப்படைத்துள்ளனர். இதில் சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளன என தெரிவித்தது.நீதிபதி: இதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க மத்திய அரசை எதிர்மனுதாரராக இணைப்பதாகக்கூறி டிசம்பருக்கு ஒத்திவைத்தார்.