People's Watch in Media
மதுரையை சோ்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆா்வலருமான ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்திருந்தாா். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். பின்னா் இது தொடா்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல் அதிகாரிகள், 3 வரு வாய்த்துறை அதிகாரிகள் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, அப்போது தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வி. வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர் பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற போலீசாருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்று அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பினர். மேலும், தற்போது நடவடிக்கை க்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
...
...
...
