“வாக்காளர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கக்கோரி நான் மனு அளிக்கவில்லை. என் பெயர் நீக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட என் தொலைபேசி எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. இருப்பினும் என் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது. மதுரையில் ஆட்சியர் தலைமையில் யானைமலை உச்சியில் ஏறி நூறு சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்படியிருக்கும் போது காரணம் இல்லாமல் வாக்காளர்களின் பெயரை நீக்கினால் நூறு சதவீத வாக்குப்பதிவு எப்படி சாத்தியமாகும்?
என் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், சத்தியமூர்த்தி ஆகியோர் உதவினர். இந்திய தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து எனது வாக்குரிமையை மீ்ட்டு கொடுத்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.