for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

24 Dec 2021 Rights forum welcomes Tamil Nadu SHRC’s order recommending compensation to sexual assault victim People's Watch in Media Madurai

People’s Watch, a Madurai-based Human Rights Organisation, has welcomed the Tamil Nadu State Human Rights Commission (SHRC) order that recommended the State government to pay compensation of ₹ 5 lakh each to 15 victims in an alleged case of...

#TheHindu, #SHRC, #Thirukovilur, #StateHumanRightsCommission, #Compensation, #Tribal, #HenriTiphagne
24 Dec 2021 Scheduled Caste or BC? Dalit Christians damned both ways People's Watch in Media Chennai

Michael*, a Dalit Christian man in Thanjavur district, had converted to Hinduism some years ago through the Arya Samaj, to change his Backward Class (BC) categorisation to Scheduled Caste. He’d hoped this would ease his access to reservation in...

#TheNewsMinute, #NewsMinute, #HenriTiphagne, #Caste, #Dalit, #BC, #SC
23 Dec 2021 காவல் துறையின் பணி வன்முறையற்றதாக இருக்க வேண்டும் People's Watch in Media Madurai

காவல் வன்முறையால் பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமுகப் பெண்களின் வழக்குமூலங்களை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் 21.12.2021 அன்று அளித்துள்ள உத்தரவை, மக்கள் கண்காணிப்பகம் வரவேற்றுப் பாராட்டுகிறது. கடலூர் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன், மற்றும் நான்கு காவலர்கள் மீது பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமூகப் பெண்கள் லட்சுமி, இராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். அதில் காவலர்களின் துன்புறுத்தல், தாக்குதல், சித்திரவதை, சட்ட விரோதக் காவல், திருடியதாகப் பொய் வழக்கு என்பன பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.  இதன்மீது மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்து பாதிப்புற்ற 15 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ. 75 இலட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல், பத்து ஆண்டுகளுக்கு மேல் காவல் துறையினர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு டிஜிபி-யை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த சம்பவத்தின்போது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பளராக இருந்த திரு.பாஸ்கரன், IPS அவர்கள் 01.12.2021 அன்று மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் எவ்விதத் தகவலும், உண்மையும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அளித்த பத்திரிகை செய்தியில் அப்படியொரு சம்பவம் நடவடிக்கைவில்லை என மறுத்ததோடு மட்டுமில்லாமல் திருட்டு வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் லெட்சுமி புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.  பழங்குடியின மக்கள் மீதான காவல் வன்முறையை வெளிச்சமிட்டுக் காட்டிய ஜெய்பீம் திரைப்படம் வெளியான பின்பும் இருளர், குறவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் மக்கள் மீதான காவல் வன்முறை வட மாவட்டங்களில் மட்டுமின்றி மத்திய, தென் மாவட்டங்களிலும் தொடர்வதை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.  பழங்குடியின மக்களை பொய்யான திருட்டு வழக்கில் குற்றவாளியாக்குதல், வழக்கமாகக் குற்றச் செயல்புரிவோராகப் புனைதல் தாக்குதல் நடத்துதல் போன்ற மீறல்களைச் செய்யும் காவல் அதிகாரிகள் இதுவரை தண்டனையில் இருந்து விலக்கு பெற்றது போல் உள்ளனர் என்பதற்கு மக்கள் கண்காணிப்பகத்தோடு இணைந்து பணியாற்றும் பேராசிரியர் கல்விமணி, திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த இரமேசுநாதன் போன்றோர் சான்றாக உள்ளனர். எனவே, பாதிப்புற்றோர்க்கு இழப்பீடு வழங்கியது மட்டும் போதாது. பாதிப்பை ஏற்படுத்திய காவல் அதிகாரிகள் மீது பிரிவு 376 உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டம் பட்டியலினத்தோர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமை திருத்தச் சட்டம் 2016 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மூன்று மாதத்திற்குள் அதாவது 31.03.2022க்குள் எடுக்கப்பட வேண்டும். காலதாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். இதுபோன்று தொடரும் காவல் வன்முறையை பொது மக்கள் வெகுவாக கண்டிப்பதன் மூலமாக காவல் வன்முறை மேலும் தொடராமல் இருக்க தமிழகத்தின் அனைத்து ஐ.ஜிக்கள், சட்டம் ஒழுங்கு பிரிவின் ஏ.டி.ஜி.பிக்கள் ஆகியோருக்கு இந்த வழக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும்.  முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை பத்தாண்டுகள் கழித்து முடித்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. தொடர்ந்து பாதிப்புறும் இருளர், குரவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் போன்ற அடிநிலை மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டுமெனில், தற்போதுள்ள மாநில மனித உரிமை ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில பட்டியல்/பழங்குடியினர் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்குநர், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குத் தேவையான பணியாளர்கள், நிதி, பயிற்சி வழங்கப்பட வேண்டும். பெயரளவில் செயல்படும் ஆணையங்கள் தேவையில்லை. ஐ.நா.வின் வழிகாட்டுதல்களையும், பாரிஸ் கோட்பாடுகளையும், பின்பற்றி செயல்படும் சுதந்திரமான, பொறுப்புள்ள திறன் மிகுந்த, வெளிப்படையான கட்டுப்பாடு மிகுந்த ஆணையங்களே இன்றைய தேவையாகும்.  - ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

#Keetru, #Tribal, #SHRC, #StateHumanRightsCommission
23 Dec 2021 HC dissatisfied with CB-CID probe into custody death in 2019 People's Watch in Media Madurai

Madurai: Madras high court on Tuesday expressed dissatisfaction at the CB-CID investigation into the 2019 Avaniyapuram custodial death case in Madurai district. A division bench of acting chief justice Munishwar Nath Bhandari and Justice Pushpa Sathyanarayana observed that the...

##Avaniyapuram, #CustodialDeath, #CustodialTorture, #HenriTiphagne, ##HighCourtOrder, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan, #MaduraiBench
22 Dec 2021 போலீஸ் விசாரணையில் மரணம்; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு: உயர்நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai

மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் டிரைவர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் டிச.,31க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சோலையழகுபுரம் முத்து கருப்பன்,'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு கடிதம் வந்தது. இதனடிப்படையில் பதிவாளர்,'சம்பவம் தொடர்பாக வழக்கு பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். இதை தானாக முன்வந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள் உத்தரவின்படி ஆதிநாராயணன் (மருது சேனை கட்சி தலைவர், அ.ம.மு.க.,கூட்டணியில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர்), மதுரை அகிம்சாபுரம் கதிர்வேல், சோலையழகுபுரம் ரமேஷ்குமார், வண்டியூர் யோகநாதன் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே விசாரணையில் முத்துக்கருப்பன் தரப்பு,'போலீசார் தாக்கியதில் பாலமுருகன் இறக்கவில்லை. விபத்தில் காயமடைந்து இறந்தார்,' என தெரிவித்தது.பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு: வழக்கு விசாரணை ஜூனில் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆடியோ பதிவிலுள்ள குரல் மாதிரியை பரிசோதிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை. ஜன.,31 வரை கால அவகாசம் தேவை எனக்கூறி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 'சீல்' இட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது. நீதிபதிகள்: இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். விசாரணை 2 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை. தாமதமின்றி விசாரணையை முடித்து டிச.,31 க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேல் விசாரணையின்போது தேவையெனில் துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யலாம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

#Dinamalar, #PoliceTorture, #CustodialDeath, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #HighCourt, #MaduraiHighCourt, ##HighCourtOrder
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கு: டிச. 31-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவ People's Watch in Media Madurai

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தை ச் சோ்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக, அவனியாபுரம் போலீஸாா் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அதன்பின்னா் பாலமுருகன் உயிரிழந்துள்ளாா். போலீஸாா் அடித்துத் துன்புறுத்தியதால் அவா் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துத் கருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றளாா் போலீஸாா் அச்சுச் றுத்தல் காரணமாக முத்துத் கருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞா் ஹென்றிடிபேன், உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதினாா். அதனடிப்படையில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே வழக்கு விசாரணையை உயா்நீயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணாஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குத் தொடா்பாக டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

#Dinamani, #Avaniyapuram, #AvaniyapuramPS, #CustodialDeath, #PoliceTorture, #BalamuruganDeath, #BalamuruganCustodialDeath
22 Dec 2021 File chargesheet in Avaniyapuram custodial death case by Dec 31: Madras HC People's Watch in Media Madurai

Warning that the court would not be liberal if the delay continues, the judges gave a deadline of 10 days for the CB-CID to complete the investigation and file chargesheet by December 31. MADURAI: Dissatisfied with the progress...

#IndianExpress, #TheNewIndianExpress, #HighCourt, #CustodialDeath, #Balamurugan, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : "விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை People's Watch in Media Madurai

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் குறித்த விசாரணையை முடித்து, வரும் 31-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் பாலமுருகன் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன்...

#ThanthiTV, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #CustodialDeath, #PoliceTorture


Join us for our cause