for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

13 Aug 2022 ஸ்டேன்சாமி குறித்து நாடகம் அரங்கேற்றம்-3 நூல்கள் அறிமுகம் - தலைமை உரை ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

13.08.2022 அன்று ஸ்டேன் சாமி படைப்பாக்கக் குழு மற்றும் தமிழ்நாடு மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு (HRDA) ஒருங்கிணைத்த, ஸ்டேன் சாமி “நான் பார்வையாளன் அல்ல” நாடகம் அரங்கேற்றமும், ஸ்டேன்சாமி குறித்தான 3 நூல்கள் அறிமுகமும், திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் ஆற்றிய தலைமை உரை

#HRDA, #HRD, #FrStanSwamy, ##FrStan, ##HenriTipahgne, #Viragalur
5 Aug 2022 கந்துவட்டியால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம்: விசாரணையை முடிக்க 2 வாரம் கெடு People's Watch in Media Madurai

மதுரை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவர் மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகளில் 10 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்கும். இதற்காக வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை நடுவர் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படாமல் நீதித்துறை நடுவர் மன்றத்திலேயே உள்ளது. இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், ஆர்.கருணாநிதி வாதிட்டனர். பின்னர் நீதிபதி, கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணையை நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விரைவில் தொடங்கும் வகையில் வழக்கின் ஆவணங்களை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதித்துறை நடுவர் அனுப்ப வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.

#Usury, #HenriTiphagne, #AdvocateHenriTiphagne, #AdvocateKarunanidhi, #MaduraiHC, #HighCourtMadurai, #ஹென்றிதிபேன், #வழக்கறிஞர்கருணாநிதி, #வழக்கறிஞர் ஹென்றிதிபேன், #கந்துவட்டி, #மதுரைஉயர்நீதிமன்றம், #உயர்நீதிமன்றம்மதுரை
27 Jul 2022 தமிழகத்தில் கஸ்டடி மரணங்கள் அதிகரிக்க காரணமென்ன? - சத்தியம் டிவி - சத்தியம் சாத்தியமே People's Watch in Media Chennai

27.07.2022 அன்று மாலை 7.00 மணிக்கு சத்தியம் டிவியில் தமிழகத்தில் கஸ்டடி மரணங்கள் அதிகரிக்க காரணமென்ன? தமிழகத்தில் ஓர் ஆண்டில் 109 காவல் மரணங்கள் நடந்தது எப்படி? என்ற தலைப்பிலான சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு. விவாத நிகழ்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கு பெற்றனர். Courtesy: Sathiyam TV

##SathiyamTV, ##Aravindakshan, ##HenriTiphagne, ##Debate
25 Jul 2022 எப்படி போராட்டகாரர்கள் மட்டும் பாத்ரூமில் வழுக்கி விழுகிறார்கள் -ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

கள்ளகுறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் youtube சேனலுக்கு அளித்த பேட்டி

##ViolenceAgainstChildren, ##Kallakurichi, #PoliceAtrocities, ##HenriTiphagne, ##Arakalagam
23 Jul 2022 News18 Tamil: காலத்தின் குரல் - Adv. திரு. ஹென்றி திபேன், கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? People's Watch in Media Chennai

23.07.2022 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு - காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் கூறியவை. நிகழ்வில் பங்கு பெற்றவர்கள்: வழக்கறிஞர் ஹென்றி திபேன், உளவியல் ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு, திமுக திரு. பி.டி. அரசகுமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. பேட்ரிக்

#Kallakurichi, #News18Tamil, #News18TamilNadu, #Debate, #VAC, #ViolenceAgainstChildren
22 Jul 2022 சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு People's Watch in Media Madurai

சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு

##Sathankulam, ##Dinakaran, ##HighCourt
19 Jul 2022 19.07.2022 | News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம் People's Watch in Media Chennai

News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம்

#Kallakurichi, #SriMathi, #News18TamilNadu, #VAC, #ViolenceAgainstChildren
18 Jul 2022 ‘Conduct joint inquiry’ People's Watch in Media Madurai

Madurai based Human Rights Organisation, People’s Watch, has urged the State Human Rights Commission, the State Commission for Women and the State Commission for Protection of Child Rights to conduct a joint inquiry into the death of a Class...

#TheHindu, #HenriTiphagne, #SriMathi, #Kallakurichi, #VAC, #ViolenceAgainstChildren


Join us for our cause