for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

19 Nov 2021 `இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்?!' - நீதிமன்ற உத்தரவின் பேரில் உடல் மறு கூறாய்வு! People's Watch in Media Chennai

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து அக்டோபர் 18-ம் தேதி, சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 19-ம் தேதி 17 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களின் படகை இடித்துச் சேதப்படுத்தியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில், மீனவர் ராஜ்கிரண் மாயமானார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே கடந்த மாதம் 20-ம் தேதி மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் சடலமாக மீட்டனர். மீனவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஜ்கிரணின் உறவினர்கள் அவர் கடலில் மூழ்கி இறக்கவில்லை. இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர், இலங்கையில் உடல் கூறாய்வு செய்துவிட்டு, கோட்டைப்பட்டினத்துக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, அவர் உடல் மறு உடல் கூறாய்வு செய்யப்படாமல் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ராஜ்கிரணின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தாரா என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், நவம்பர் 18-ம் தேதி ராஜ்கிரணின் பிரேதத்தை மறு உடல் கூறாய்வு செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்பேரில் நேற்றிரவு, ஓய்வுபெற்ற தடயவியல்துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ், மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மணமேல்குடி வட்டாட்சியர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. அதையடுத்து, மீண்டும் ராஜ்கிரணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

#media
18 Nov 2021 உயிரிழந்த மீனவர் உடல் மறு பிரேதப் பரிசோதனை: நவ.24-ல் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் People's Watch in Media Pudukottai

இலங்கை ரோந்துக் கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை, வரும் 24-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண் (30), எஸ்.சுகந்தன் (30), ஏ.சேவியர் (32). இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் மீனவர்கள் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதோடு மீனவர் ராஜ்கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயர் தப்பிய மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து பின்னர் விடுவித்தனர். இதையடுத்து, அக்.23-ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரைக் கொலை செய்திருக்கலாம் எனவும், எனவே அவரது உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3-ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம், ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பிருந்தா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வட்டாட்சியர் முன்னிலையில் மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட ராஜ்கிரணின் சடலத்தைத் தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ் மணி, சரவணன் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அறிக்கை வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

#media
18 Nov 2021 மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு! People's Watch in Media Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.   இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படுகிறது.

#media
18 Nov 2021 Re-Postmortem of Pudukottai fisherman's body conducted People's Watch in Media Pudukottai

#media
18 Nov 2021 மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு! People's Watch in Media Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.     இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படுகிறது.

##Fisherman, ##Kottaipattinam, ##Pudukottai, ##Rajkiran, ##Re-postmortem, ##HighCourtOrder, ##MaduraiHighCourt, ##HighCourtDirection, #SriLankanNavy, #Navy
18 Nov 2021 Over 200 civil society leaders write to CJI urging hearing of pending key constitutional matters in SC People's Watch in Media Mumbai

Over 200 civil society leaders have written a joint petition to the Chief Justice of India requesting listing of important pending constitutional matters including CAA, Abrogation of Article 370, farm laws, continued misuse of UAPA etc. “We request...

#CJI, #ChiefJusticeofIndia, #SupremeCourt, #CSO, #CivilSocietyOrganisation, #NationalHerald


Join us for our cause