Media

மதுரை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவர் மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகளில் 10 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்கும். இதற்காக வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை நடுவர் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படாமல் நீதித்துறை நடுவர் மன்றத்திலேயே உள்ளது. இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், ஆர்.கருணாநிதி வாதிட்டனர். பின்னர் நீதிபதி, கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணையை நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விரைவில் தொடங்கும் வகையில் வழக்கின் ஆவணங்களை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதித்துறை நடுவர் அனுப்ப வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.


27.07.2022 அன்று மாலை 7.00 மணிக்கு சத்தியம் டிவியில் தமிழகத்தில் கஸ்டடி மரணங்கள் அதிகரிக்க காரணமென்ன? தமிழகத்தில் ஓர் ஆண்டில் 109 காவல் மரணங்கள் நடந்தது எப்படி? என்ற தலைப்பிலான சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு. விவாத நிகழ்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கு பெற்றனர். Courtesy: Sathiyam TV

கள்ளகுறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் youtube சேனலுக்கு அளித்த பேட்டி

23.07.2022 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு - காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் கூறியவை. நிகழ்வில் பங்கு பெற்றவர்கள்: வழக்கறிஞர் ஹென்றி திபேன், உளவியல் ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு, திமுக திரு. பி.டி. அரசகுமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. பேட்ரிக்

சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு

News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். ஜூலை 13 அன்று காலை அப்பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்யச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள், ஆசிரியர்கள் மாணவியை படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவி எழுதியதாக தற்கொலைக் கடிதம் ஒன்றையும் உறவினர்கள் முன் படித்துக் காட்டியுள்ளதாக அறிய முடிகிறது. அந்த கடிதத்தின் அடிப்படையில் அப்பள்ளி கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ........................ மக்கள் கண்காணிப்பகம் முன்வைக்கும் பரிந்துரைகள்: தமிழக மாநில மனித உரிமை ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் ஆணையமும், மாநில பெண்கள் ஆணையமும் கூட்டாக இணைந்து மாணவி மரணம் குறித்து முழுமையான ஆய்வினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு உண்மையாக நடந்தவை என்ன என்பதை அறியும் உரிமை உண்டு. காவல்துறையின் இறுதிக்கட்ட நடவைக்கைகள் மக்களின் உண்மை அறியும் தாகத்தை தணிக்கவில்லை, நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே தான் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆணையங்கள் கூட்டாக இணைந்து உண்மை நிலையை கண்டறிந்து பொதுவெளிக்கு அறிவிப்பதும், சட்டரீதியான நடவடிக்கையை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இந்த சூழலை கவனத்தில் கொண்டு, மேற்கண்ட மூன்று ஆணையங்களின் தலைவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட உண்மையறியும் குழு உடனடியாக ஏற்படுத்தப்பட்டு விசாரணையை துரிதமாக தொடங்க வேண்டும். இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அலுவலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை இணைத்து இந்த ஆய்வினை முன்னெடுக்க வேண்டும். ஜூலை 13 முதல் – ஜூலை 16 வரை உயர் காவல்துறை அலுவலர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களின் அலட்சியமே ஜூலை 17 வன்முறைக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க முடிகிறது. இவர்கள் மீதான கவனக்குறைவு குறித்து சிறப்பு விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் நடத்திட வேண்டும்.

Madurai based Human Rights Organisation, People’s Watch, has urged the State Human Rights Commission, the State Commission for Women and the State Commission for Protection of Child Rights to conduct a joint inquiry into the death of a Class...

The Universal Periodic Review of India is due in 2022, the run-up to which has already started. This is an event where the National Human Rights Commission is most likely to get exposed. NATIONAL Human Rights Institutions across the world are...