Media

இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் இக்குழுவினர் தெரிவித்தது: ஜெகநாதன் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கூட்டுச்சதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல் குவாரிகள் செயல்படுவதற்கான அனுமதி குறித்து, குவாரிகளின் முன்பு எந்த விவரமோ, அறிவிப்போ இல்லை. இது மிகப்பெரிய சட்டவிரோதம். ஆட்சியர் சொல்லும் பட்டியலை மட்டுமே ஏற்காமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி பெறாத கல் குவாரிகள் குறித்து தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். குவாரிகளில் 350 அடிக்கு மேல் பாதாள குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்தும், அனுமதி பெற்ற கல் குவாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கரூரில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்த எங்களின் ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். சட்டப்பேரவையில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கரூர்: ''சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை தொடர்பான, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும்'' என, உண்மை கண்டறியும் குழு தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அப்துல் சமது தெரிவித்தார். கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, காளிப்பாளையத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோத கல்குவாரியை எதிர்த்து போராடி வந்த நிலையில் கடந்த, 10ம் தேதி, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அப்துல் சமது தலைமையில், உண்மை கண்டறியும் குழுவினர், ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட இடம், கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு, கரூரில் அப்துல் சமது நிருபர்களிடம் கூறியதாவது: சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில், உடனடியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மேலும், கொலை வழக்கில் பலருக்கு தொடர்பு இருந்தால், கைது செய்ய வேண்டும். க.பரமத்தி பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. அதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த குவாரிகளிலும் தகவல் பலகை இல்லை. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட குழுவை அமைத்து, விசாரித்து, சட்ட விரோதமான கல் குவாரிகளை மூட வேண்டும். மேலும், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும். இதுதொடர்பாக சட்டசபையிலும் பேசுவேன். கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்துக்கு, 50 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். கல் குவாரிகள் உள்ள பகுதிகளில், சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்து, பாறைகளை உடைக்கின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் சொல்லும், விதிமுறைகளுக்கும், கல் குவாரிகளில் நடக்கும் செயல்களுக்கும் முரண்பாடு உள்ளது. இதையெல்லாம், முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


A fact-finding team on Saturday urged the Tamil Nadu government to expedite the investigation into the recent murder of activist R. Jaganathan of Kalipalayam in Karur district, who was run over by a truck belonging to a stone quarry...





மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது. கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் . பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்